முத்துப்பேட்டை அருகே குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்புகுடிநீர் தட்டுப்பாட்டைபோக்க வலியுறுத்தி முத்துப்பேட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் பம்ப் உள்ளது. இங்கிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு ஒரு குழாய் மூலம் தண்ணீரும், சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தனித்தனியாக குழாய்களில் குடிநீர் செல்கிறது.

இதில் பல இடங்களில் அனுமதி இல்லாமல் மெயின் குழாயில் பூமிக்கு அடியிலிருந்து இணைப்பு எடுத்துள்ளனர். இதன்மூலம் பலர் தென்னை தோப்புகளுக்கும், சாகுபடி நிலங்களுக்கும் தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீரை சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பெயரளவில் சில மாதங்களுக்கு முன் ஒரு சில சட்டவிரோதமான இணைப்புகளை மட்டும் துண்டித்தனர். ஆனால் முக்கிய பிரமுகர்கள் சட்டவிரோதமாக
எடுத்துள்ள இணைப்புகள் துண்டிக்கவில்லை.

இதனால் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதி, சுற்றுவட்டார பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் சங்கேந்தி பகுதியில் உள்ள சிவராமன் நகர், நத்தம் பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு வரும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை ேபாக்க வலியுறுத்தி முத்துப்பேட்டை எடையூர் சங்கேந்தி கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமையில் முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கதுரை மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி தாசில்தார் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், சாந்தி, டிஎஸ்பி அருண், எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இன்னும் 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து தட்டுப் பாடு இல்லாமல் குடிநீர் வழங்கப்படும் என்றனர். இதனால் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.