முத்துப்பேட்டை அருகே மண்டபத்து குளத்தில் மணல் திருட்டு விஏஓ தடுத்து நிறுத்தினார்முத்துப்பேட்டை மண்டப குளத்தில் மணல் திருடப்பட்டு வந்ததை விஏஓ தடுத்து நிறுத்தினார். முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியை சேர்ந்த நாச்சிக்குளம் ஊர் எல்லையில் கிழக்கு கடற்கரை சாலை அருகே மண்டபத்து குளம் உள்ளது. இதனை பீர் குளம் என்றும் அழைப்பர். இந்த குளத்தை ஒரு காலத்தில் அப்பகுதி மக்கள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தில் ஒரு கிணறு அமைத்து அதிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர்  எடுக்கப்பட்டு குழாய் மூலம் இந்த கிராமத்துக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

அதன்பிறகு ஆக்கிரமிப்பால் குளம் சுறுங்கி குட்டையாக மாறியது. அதனால் குளத்தின் தன்மையும் மாறுப்பட்டு தண்ணீரை ெபாதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போனது. தற்போது குளத்தின் ஆழமும் தூர்ந்துபோனதால் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதை பயன்படுத்தி குளத்தின் அருகே உள்ள தனியார் இடத்தின் சொந்தக்காரர் ஒருவர், கடந்த ஓராண்டாக நிலத்தை தூர்த்து வீடு கட்டியுள்ளார். இதற்கு இந்த குளத்திலிருந்து சட்ட விரோதமாக பெருமளவில் மணல் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த தனியார் கட்டிடத்துக்கு சுற்றிலும் பள்ளமாக இருந்ததால் அதை தூர்ப்பதற்கு தேவையான மணலை கடந்த ஒரு வாரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் பொறுப்பேற்றுள்ள உதயமார்த்தாண்டபுரம் விஏஓ கனிமொழியை நேற்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சந்தித்து குளத்தில் மணல் திருட்டு நடப்பது குறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற விஏஓ கனிமொழி, மணல் எடுப்பதை தடுத்து நிறுத்தி விசாரித்து வருகிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.