களவு போனதில் அதிரை காவல்துறை மீட்டது எவ்வளவு தெரியுமா? கேட்ட அசந்து போவீங்கஅதிரையில் சமிப காலமாக பல்வேறு தருணங்களில் திருட்டு முயற்சிகள் நடைபெற்றது இருப்பினும் அதன்பிறகு காவல்துறையின் அலட்சிய போக்கினால் காவல் நிலையம் அருகிலேயே திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டினர். இது அதிரை காவல்துறையினருக்கு மாவட்ட அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வாக கருதப்பட்டு வந்த நிலையில் சுமார் 30சதுர கி.மீ காவல் எல்லை பரப்பளவு கொண்ட அதிரை காவல்நிலையத்தில் போதுமான காவலர்கள் பணியில் இல்லை என குமுறுகின்றனர் சில காக்கிகள்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2012முதல் 2014வரையில் களவு போனவை மற்றும் அதில் கண்டுபிடிக்கப்பட்டவை குறித்த விபரங்கள் தற்பொழுது தெரியவந்துள்ளன. அதன்படி 2012ஆம் ஆண்டு ரூ. 5,29,100 களவு போனதில் ரூ. 1,49,100, 2013ஆம் ஆண்டு ரூ. 5,27,000 களவு போனதில் ரூ. 3,42,000, 2014ஆம் ஆண்டு ரூ. 5,05,500 களவு போனதில் ரூ. 3,03,000 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.