புத்தகங்களை மஹராக கேட்ட கேரள இஸ்லாமிய பெண்மனி!கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கணவரிடம் புத்தகங்களை மஹராக கேட்டுள்ளார். இஸ்லாமியர்கள் வழக்கப்படி திருமணத்தின் போது மணப்பெண் கேட்கும் மஹரை மணமகன் வீட்டார் கொடுப்பது வழக்கம். இதன்படி பெரும்பாலானோர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களையே கேட்டு வாங்குவார்கள்.

இதிலிருந்து வித்தியாசமாக கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் சாலா நெச்சியில் தனது கணவரிடமிருந்து புத்தகங்களைப் கேட்டுள்ளார்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்ற சாலாக்கும் அனீஸ் நடோடி என்பவருக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது தனக்கு வழங்க வேண்டிய மஹராக, இலக்கியம் மற்றும் அரசியல் குறித்த 50 புத்தகங்களை சாலா கேட்டுள்ளார்.

மணமகன் அனீசும், சாலா கேட்ட புத்தகங்களை பெங்களூரில் உள்ள கடைக்குச் சென்று தேடித்தேடி வாங்கியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சாலா, தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தங்களது திருமணம் நடைபெற்றதை வெளி உலகுக்கு தெரிவிப்பதற்காகவே புத்தகங்களை மஹராக கேட்டுப் பெற்றதாக தெரிவித்தார்.

சாலாவின் விருப்பம் தொடர்பாக, அவரது கணவர் தெரிவித்தபோது, மகர் என்பது பெண்களுக்கான உரிமை என்றும், ஆண்களுக்கான பெருந்தன்மை இல்லை என்றார்.

மேலும், தாங்கள் மதத்திற்கு எதிராக செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.