முத்துப்பேட்டை பகுதியில் நடைபெறும் சுகாதார பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் சத்யா பார்வையிட்டார்!திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட அணைத்து ஊராட்சிகளிலும் வட்டார சுகாதார துறை சார்பில் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் துணையுடன் மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தும,; குளோரினேசன் செய்தல் மற்றும் தெருக்களில் அசுத்தமான பகுதியை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சுகாதார துறை ஆய்வாளர்கள் பழனியப்பன், ஹரிபாஸ்கர், ராஜ்குமார், ராஜேஷ், சீனிவாசன் ஆகியோரது கொண்ட தனித்தனியாக கொண்ட பணியாளர்கள் இந்தபணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பணிகள் நடைபெறும் எடையூர், சங்கேந்தி, உதையமார்த்தாண்டபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சத்யா பார்வையிட்டார். அப்போது எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல், சங்கேந்தி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், உதையமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்பொழுது வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சத்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் வாழ்விடங்களான தேவையற்ற பொருட்கள் டயர், பானை, ஆட்டுக்கல், தொட்டி போன்றவை அப்புறப்படுத்தும் பணியும், நீர் உள்ள பாரல், தொட்டி போன்றவற்றில் மருந்து ஊற்றும் பணியும் மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தேவையற்ற பொருட்கள் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காவனம் அப்புறப்படுத்தியும், தண்ணீர் பிடிக்கும் பாரல், தொட்டி போன்றவை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்து பயன் படுத்த வேண்டும் வீடுகளுக்கு வரும் சுகாதார மற்றும் மஸ்தூர் பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகிறேன் இவ்வாறு சத்யா தெரிவித்தார்.
மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.