உடல் முழுவதும் கொப்புளங்களைக் கொண்ட வினோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன்!
பழனி அருகே உடல் முழுவதும் கொப்புளங்களால் பாதிக்கப்பட்டு வினோத நோயினால் அவதிப்படும் தங்கள் மகனுக்கு, உயர் சிகிச்சை அளித்திட தமிழக அரசு உதவிட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூரைச் சேர்ந்த காட்டப்பன் தனியார் ஆலையில் கூலிவேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், காவியபாலன் என்ற 9 வயது மகனும் உள்ளனர்.
தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் காவியபாலனுக்கு, குழந்தைப் பருவம் முதலே உடல் முழுவதும் கொப்புளங்களைக் கொண்ட வினோத நோயின் பாதிப்பு காணப்படுகிறது. இதற்காகப் பல மருத்துவ மனைகளில் சிகிச்சை அளித்தும் பலனில்லை எனவும், மருந்துக்காக மட்டும் மாதம் 2,000 ரூபாய் வரை செலவு செய்து வருவதாகவும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.
மேலும் தங்கள் மகனுக்கு  உயர் சிகிச்சை அளிக்கத் தமிழக முதல்வர் உதவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.