இதனை எப்படி அந்த தந்தை கையாள வேண்டுமென பார்ப்போம்.
வீட்டுக்குள் நுழையும் போதே அவர் கடும் சத்தம் போட்டவராக நுழைந்தார். பிள்ளையை அழைத்து அடிக்க துவங்கினார் பதறிபோன நான் உடனே அவரை தடுக்க முயன்றேன். ஆனால் அவர் என்னையும் சேர்த்து அடித்தார்"

இந்த வரிகள் உணர்த்தும் செய்தியாது என நாம் சற்று நோக்கினால் புரியும். 7வயது குழந்தை வீட்டுக்கு வெளியே தந்தை நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை கீழே தள்ளிவிட்டுவிட்டான். மிகவும் கஸ்டப்பட்டு வாங்கிய பைக் என்பதால் தந்தைக்கு கடும் கோபம் உடனே வீட்டிற்குள் விளையாடிகொண்டிருந்த குழந்தையை போட்டு அடிக்கிறார். இதுவா கண்டிக்கும் முறை?

இதனை எப்படி அந்த தந்தை கையாள வேண்டுமென பார்ப்போம். குழந்தை பைக்கை தள்ளிவிட்டதை பார்த்தவுடன் தந்தை பைக்கை எடுத்து கொண்டு எதுவும் சொல்லாமல் தான் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று பணிகளை முதலில் முடிக்க வேண்டும். எல்லா பணிகளும் முடிந்தபின் குழந்தைக்கு பிடித்த ஆரோக்கியமான தின்பண்டங்கள் வாங்கிகொண்டு வீட்டிற்கு செல்லவும்.

பெரும்பாலும் குழந்தைகள் தந்தை பணி முடித்து வரும் சமயத்தில் தூங்கிகொண்டிருக்கும் அப்பொழுது அவர்களை எழுப்ப வேண்டிய அவசியமில்லை. மறுநாள் காலையில் எழுந்தவுடன் குழந்தைக்கு என நேரம் ஒதுக்கி அன்பு கடலால் அவர்கள் எதிர்பார்க்காத நிலையில் தூக்கி குழந்தையுடன் விளையாட வேண்டும். பின்பு ஏற்கனவே வாங்கி கொண்டுவந்தவைகளை கொடுத்து அவர்களின் மனநிலையை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் பின்பு அவர்களிடம் புன்னகைத்த முகத்துடன் மீண்டும் அதேதவறை செய்ய கூடாது என எடுத்து கூற வேண்டும்.

இவ்வாறான அணுகு முறையை கொண்டு நாம் குழந்தைகளிடம் அறிவுரை வழங்கும் அதேசமயம் அவர்களுக்கு நன்னெறி விசயங்களை போதிக்கவும். இதன்காரணமாக பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே அன்பு அதிகரிக்கும் அவர்களுக்கும் நம்பிக்கை உண்டாகும். இதனால் முடிந்தளவு எல்லாவற்றையும் அவர்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்வர். ஆகையால் குழந்தைகள் நிச்சயம் வழிதவறி செல்ல வாய்ப்புகள் குறைவு.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.