சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை:
சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை:

(அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது)

இந்த சம்பவம் ஒரு சவூதி இளைஞனுடையது. வாழ்க்கையில் அவனுக்கு நிம்மதி இல்லை. அவனது சம்பளம் வெறும் நான்காயிரம் ரியால் மட்டுமே! கல்யாணமானவனாக இருந்ததால் வீட்டுச் செலவு சம்பளத்தை விட அதிகமாகவே இருந்தது.

மாத முடியும் முன்பே சம்பளம் முழுவதும் செலவாகி கடன் வாங்கும் நிலையில் இருப்பான்.
இப்படியே கடன் வாங்கி, வாங்கி கடன் என்னும் புதைமணலில் சிக்கித் தவித்தான். அவன் தனது வாழ்க்கை இப்படியாகத் தான் செல்லும் என முடிவுச் செய்து விட்டான்.

அவனது மனைவியும் தங்களது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டிருந்தும் கடன் சுமையால் மூச்சு திணறிக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அவன் தனது நண்பர்களிடத்தில் இருக்கும் போது ஆலோசனை கூறத்தக்க நண்பரும் இருந்தார். இந்த நண்பரின் ஆலோசனைகளுக்கு மரியாதை கொடுப்பான்.

பேச்சுவாக்கில் தனது பொருளாதாரக் கஷ்டத்தை தெரிவித்தான். கதையைக் கேட்டு சம்பளப் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினை "சதகாவாக" கொடுக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளும்படி ஆலோசனை வழங்கினார்.

சவூதி இளைஞன் வியப்பும் திகைப்பும் மேலிட "ஐயா, வீட்டுச் செலவிற்கே சம்பளப் பணம் பற்றாமல் கடன் வாங்க வேண்டிய நிலையில் இருக்க சதாகா கொடுப்பதற்கு யோசனை கூறுகிறீர்களே?"
என வினவினான்.

பிறகு வீட்டிற்கு வந்து மனைவியிடம் அவரது ஆலோசனையைப் பற்றி கூற, அவளோ இதனையும் பரீட்ச்சித்து பார்க்கலாமே? "இறைவன் ரிஜ்க்கின் கதவினை திறந்துவிட வாய்ப்பு ஏற்படும்" என்றாள்.

மாதா மாதம் 4 ஆயிரம் ரியாலிலிருந்து 30 ரியால் சதகாவக வழங்க உறுதிபூண்டு மாதக் கடைசியில் சதகா  வழங்க ஆரம்பித்தான்.

சுப்ஹானல்லாஹ்!
அவனது நிலைமையே மாறிவிட்டது என்பதனை சத்தியமிட்டு கூறுகிறேன்.

எப்போதும் பொருளாதார நெருக்கடியும் கவலையும் எங்கே? தற்போதைய நிம்மதியான நிலைமை எங்கே? சின்னஞ்சிறு பொறுத்துக் கொள்ளக்கூடிய கடன் சுமையைத் தவிர. விடுதலை கிடைத்த நிம்மதியோடு வாழ்க்கையும் பூங்காவனமாக உணர்ந்தான்.

சில மாதங்களுக்குப் பின் தனது குடும்ப வாழ்க்கையை முறைபடுத்தி, சம்பளப் பணத்தினை வகைப்படுத்தி முறையாக செலவு செய்ய, இதில் முன் எப்போதும் கிடைக்காத பரக்கத் கிடைக்கத் தொடங்கியது!ا

இந்த வருமானத்தில் நான் எனது கடன் சுமையிலிருந்து வெகு விரைவில் மீண்டுவிடுவேன் என தெரிந்துக் கொண்டேன்.

அல்லாஹுத்தாலா எனது வருமானத்திற்கான மற்றொரு கதவை திறக்கச் செய்தான்.

எனது நண்பர் ஒருவரின் தனது சொத்து பரிவர்த்தனை ரியல் எஸ்டேட் தொழிலில் நானும் பங்கேற்றேன்.

அவருக்கு வாடிக்கையாளர்களை ஏற்படுத்தி தருவேன். அதனால் அவருக்குக் கிடைக்கும் லாபத்தில் கணிசமான ஒரு தொகை என் பங்காக கிடைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ்! எனக்கு கிடைக்கும் வாடிக்கையாளர் மூலமாக வேறு வாடிக்கையாளர்கள் களும் கிடைத்தனர்.

இங்கும் அதேபோல் கிடைக்கும் வருமானத்தில் சதகாவிற்காக ஒரு குறிப்பிட்ட தொகையினை ஒதுக்குவேன்.

இறைவன் மீது சத்தியமாக சதகாவின் பலன் என்னவென்பதை யாரும் அறியமாட்டார்கள், அதனை செயல்படுத்தி பார்த்தவர்களைத் தவிர!

சதகா செய்யுங்கள், ஸபர் என்னும் பொறுமையை கடைபிடியுங்கள், அல்லாஹ்வின் கிருபையும் அருளும் மழையாக பொழிவதை கண்கூடாக பார்ப்பீர்கள்!

குறிப்பு:

1. நீங்கள் முஸ்லீம் ஒருவருக்கு சதகா செய்ய ஆலோசனை கொடுத்து அதனை அவர் செயற்படுத்தினால் சதகா செய்வதால் அவருக்கு கிடைக்கும் புண்ணியமே ஆலோசனை கூறியவருக்கும் கிடைக்கும். அதனால் சதகா செய்தவரின் புண்ணியம் குறையாது.

யோசியுங்கள்!!!
நீங்கள் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டாலும் உங்கள் ஆலோசனையை செயல்படுத்தி சதகா கொடுப்பவர்கள் இருந்துக் கொண்டிருப்பார்கள். இதனால் உங்களுக்கு புண்ணியம் கிடைத்துக் கொண்டேயிருக்கும்!

2. இதே போல் நீங்களும் இச்செய்தியினை பரப்பச் செய்து அதனால் யாரேனும் சதகா செய்வதை பழக்கமாக்கிக் கொண்டால் உங்களுக்கும் சதகா செய்பவருக்கு கிடைக்கும் அளவு புண்ணியம் கிடைக்கும்.
(இந்த செய்தி அறிந்து நான் சதகா கொடுப்பதை பழக்கமாக்கிக் கொண்டதால், சத்தியமாக கூறுகிறேன்: எனக்கு மன நிம்மதியும் ஆத்ம திருப்தியும் கிடைத்தை உணருகிறேன். - மொழி பெயர்ப்பாளர்)

நண்பரே!
நீங்கள் மாணவராக இருப்பின் உங்களுக்கு கிடைக்கும் அரசு ஊக்கத்தொகையாவோ கைச்செலவுத்தொகை-யாகவோ இருந்தாலும் அதிலும் சிறு தொகையினை சதகா கொடுக்கச் செய்யுங்கள்.

சதகா பெறுபவரின் கையை அடைவதற்கு முன் அல்லாவின் கையை அடைந்தால் நிச்சயமாக பெறுபவருக்கு கிடைக்கும் சந்தோஷத்தைவிட கொடுப்பவருக்கு கிடைக்கும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.

என்ன தாங்கள் சதகாவின் பலன்களை அறிவீர்களா?
முக்கியமாக 17,18,19 எண் விஷயங்களை   கவனமாக படியுங்கள்.

சதகா கொடுப்பவர்களும், அதற்கு காரணமாக இருப்பவர்களும் கேளுங்கள்:

1. சதகா சுவர்க்க வாயில்களில் ஒன்றாகும்.

2. சதகா நற்செயல்களில் முக்கியமானதாகும். அன்னதானம் அவற்றிலும் முக்கியமானது.

3. சதகா கியாமத்து
நாளில் நிழல் கொடுக்கும். சதகா கொடுப்பவர்களுக்கு நரக நெருப்பிலிருந்து காக்கும்.

4. சதகா இறை கோபத்தை தணிக்கும், கப்ரு வெப்பத்தை தணிக்க உதவிடும்.

5. சதகா மய்யத்திற்கு சிறந்த அன்பளிப்பும், லாபகரமானதும் ஆகும். அல்லாஹ் இதற்கான புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டேயிருப்பான்.

6. சதகா அழுக்கு நீக்கியாகும். மனதை சுத்தப்படுத்துவதால் புண்ணியம் அதிகரிக்கும்.

7. சதகா, அதை செய்பவர்களின் முகத்திற்கு கியாமத்து நாளில் பிரகாசத்தையும் தேஜஸையும் கொடுக்கும்.

8. சதகா கியாமத் நாளின் பயங்கரத்திலிருந்து காப்பாற்றும்,  நடந்தவைகளைப் பற்றி பச்சாதாபப்படச் செய்யாது.

9. சதகா பாவ மன்னிப்பாகவும், தவறுகளுக்கு பரிகாரமாகவும் இருக்கிறது.

10. சதகா நல்முடிவிற்கு சுபச்செய்தியாகவும், மலக்குகள் துவாவிற்கு காரணமாக இருக்கிறது.

11. சதகா கொடுப்பவர் சிறந்த மனிதர்களில் சேர்ந்தவராவார், இதற்கு காரணமானவர்களுக்கும் புண்ணியம் சேரும்.

12. சதகா கொடுப்பவருக்கு பெரிய வெகுமதிக்கு வாக்குறுதியாகும்.

13. மற்றவர்களுக்காக  செலவழிப்பவர் இறையச்சமுள்ளவர்களின் வரிசையில் சேர்க்கப்படுவார், சதகா கொடுப்பவரை இறைவனின் படைப்புகள் விரும்பும்.

14. சதகா கொடுப்பது கருணை உள்ளத்திற்கும் வள்ளல் தன்மைக்கும் அடையாளமாகும்.

15. சதகா துவா ஏற்கப்படுவதற்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்.

16. சதகா முஸீபத் மற்றும் கஷ்டங்களை விலக்குகிறது. உலகில் தவறுகளின் 70 கதவுகள் அடைக்கப்படுகின்றன.

17. சதகா ஆயுள் மற்றும் சொத்துக்கள் அதிகரிப்பிற்கும் காரணமாகும். ரிஜ்கும் வெற்றியும் கிடைக்கச் செய்யும்.

18. சதகா மருத்துவமும், மருந்தும், ஷஃபாவுமாகும்.

19. சதகா நெருப்பில் எரிவதிலிருந்தும், நீரில் மூழ்கி விடுவதிலிருந்தும், திருட்டு மற்றும் துர்மரணத்திலிருந்தும் தடுக்கும்.

20. சதகா விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு செய்தாலும் கூட புண்ணியம் கிடைக்கும்.

(கடைசி வார்த்தை)

சதகாவின் நிய்யத்தில் இத்தகவலை பரப்புவது மிகச்சிறந்த சதகாவாகும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.