ஒட்டகம் வெட்ட தடை! உயர்நீதிமன்றம் தீர்ப்பு!தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘பிப்பீள் பார் கேட்டில் இன் இந்தியா’ என்ற அமைப்பின் செயலாளர் அருண் பிரசன்னா, கடந்த 2015-ல்  பொது நல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன் விசாரணைக்கு இன்று (ஆகஸ்ட் 18) வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குத் தாக்கல் செய்த அருண் பிரசன்னா கூறுகையில், “ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு வெட்டப்படுகின்றன. அதைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் தகவல் உரிமை அறியும் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் ஒட்டகம் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரித்தோம். அதைக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தோம். இந்த வழக்கில் தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்துத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

courtesy: vikatan
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.