முத்துப்பேட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரிமா சங்கம் உதவி!



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொருட்கள் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி அரிமா சங்க தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலரிடம் நோட்டு பேனா மற்றும் எழுத்து பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் உதவி திட்ட அலுவலர் சங்கரநாரயணன், அரிமா சங்க மாவட்ட தலைவர் ராஜசேகரன், செயலாளர் மாரிமுத்து, முன்னால் தலைவர் அப்துல் அஜிஸ், தலைமையாசிரியர் கோதண்டராமன், கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கருணாமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.


படம் செய்தி
முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நோட்டு பேனா மற்றும் எழுத்து பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.