குடிநீர் வராததை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை!திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட கோவிலான் தோப்பு காமராஜர் காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை, இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் பானுமதி, வளர்மதி, இந்திரா, அஞ்சலி, மேரி உட்பட பலர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் முற்றுகையிட்ட பெண்களிடம் தற்பொழுது பேரூராட்சியில் செயல் அலுவலரும் தலைவரும் இல்லை நாளை இன்று செயல் அலுவலர் வந்ததும் தகவல் தெரிவித்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள் இதனையடுத்து முற்றுகையிட்ட பெண்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
படம் செய்தி
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட கோவிலான் தோப்பு காமராஜர் காலனி பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து நேற்று காலை அப்பகுதி பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.