கச்சுரி வால் அதிரடி ஆக்சன் தமிழ்நாடு போலீசும் இதை அமல்படுத்துமா ?



அவர்கள்தான் பெறுவிரல் தெறியாத பெரியவயர் பெருச்சாளியாச்சே எப்படி முடியும்.
கெச்சுரி வால் ஆட்சி செய்யும் டெல்லியில் செல்போனில் உள்ள வாட்ஸ்ஆப் வசதி மூலம் லஞ்சம் கேட்கும் போலீசார் குறித்து புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
டெல்லியில் பொது மக்களிடம் லஞ்சம் கேட்கும் போலீசார் குறித்து வீடியோ எடுத்து அதை செல்போனில் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்தால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் வீடியோக்களை 9910641064 என்ற செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைத்தால் சில மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை மூலம் லஞ்சம் கேட்ட 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கூடுதல் கமிஷனர் ஜி.சி. திவேதி கூறுகையில்,
இந்த முறையை டெல்லி போலீஸ் கமிஷனர் பி. எஸ். பஸ்ஸியின் அறிவுரைப்படி துவங்கினோம். காவல் துறையை லஞ்சம் இல்லா துறையாக்கவே இந்த நடவடிக்கை என்றார்.
மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில்,
இந்த செல்போன் எண் மூலம் புகார் கொடுத்தால் அந்த நபருக்கு போன் செய்து அது உண்மையா என்பதை கண்டறிகிறோம். மேலும் அந்த புகார் வீடியோவை தடயவியல் நிபுணர்கள் சோதித்து உண்மை என்று கூறினால் உடனே சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை கைது செய்து, சஸ்பெண்ட் செய்கிறோம். கடந்த 6ம் தேதி மட்டும் 14 வீடியோ புகார்கள் வந்தன. 7ம் தேதி 2 புகார்களும், 8ம் தேதி 27 புகார்களும் வந்தன என்றார்.
இந்த புகார்களில் 5 தான் உண்மையானவை, மற்றவே இத்திட்டம் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அனுப்பி வைக்கப்பட்டவை என்று துணை கமிஷனர் சிந்து பிள்ளை தெரிவித்தார்.


Thanks To: FB அன்புடன் ஹனிபா
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.