முத்துப்பேட்டை அருகே விபத்தில் செயலிழந்த காலுடன் வருமையில் வாடும் சக்திவேல்முத்துப்பேட்டை அருகே விபத்தில் செயலிழந்த காலுடன் வருமையில் வாடும் சக்திவேல்! யாரும் கண்டுக்கொள்ளாத பரிதாபம்..
உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (40) விவசாயியான இவர் கீற்று வியாபாரம் மற்றும் திருமண தரகராகவும் உள்ளார். இவருக்கு சித்ரா (33) என்ற மனைவியும், பொதுஉடைமூர்த்தி (8) என்ற மகனும், கலைச்செல்வி (7) என்ற மகளும் உள்ளனர். கடந்த 27.08.2015-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு ஒரு பைக்கிள் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சக்திவேல் சென்றபோது கருவேப்பஞ்சேரி அருகே நடந்த விபத்தில் மினிலாரி மோதி சக்திவேலுவின் ஒரு கால் துண்டானது. இதனையடுத்து திருவாரூர் மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிக்சை மூலம் துண்டானகாலை இணைத்து பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீடு திரும்பிய இவரின் கால் முற்றிலும் செயல் இழந்த நிலையில் உள்ளதால் இவர் எழுந்து நடக்க முடியாமல் சுமார் ஒரு வருடமாக வீட்டில் படுத்த படுக்கையில் முடங்கி உள்ளார். இதனால் இவரின் உழைப்பு இல்லாததால் எந்தவித வருமானமும் இன்றி இன்றைக்கு சாப்பாட்டுக்கே வழியின்றி இவரது குடும்பம் பரிதவித்து வருகின்றது. உறவினர் சிறிது அளவு உதவி செய்து வந்தாலும் அவரின் மருந்து செலவிற்கும், குழந்தைகள் படிப்பு மற்றும், பராமரிப்பு செலவிற்கும் போதுமானதாக இல்லாததால் ஒருவேலை உணவிற்கே சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவரது கூரைவீடு கீற்று மாற்றி பல வருடங்கள் ஆனதால் வீட்டுக்குள் வானம் தெரியும் அளவிற்கு ஆங்காங்கே சேதமாகி உள்ளது. மழை மற்றும் வெயில் காலத்தில் வசிக்க முடியாமல் இவரது குடும்பம் மிகவும் பரிதவித்து வருகின்றது. இவரின் பரிதாபமான நிலையை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. எந்த ஒரு உதவியும் செய்ய முன் வரவில்லை. இந்த நிலையில் தமிழக முதல்வர் பார்வைக்கு பரிதாபமான சூழ்நிலையை கொண்டு செல்ல வேண்டும். இவருக்கு இவரது குடும்பத்தினருக்கும் தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும்.அதேபோல் உதவி செய்யும் எண்ணம் உள்ளவர்கள் உதவிகரம் நீட்டவேண்டும் என அப்பகுதி சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து சக்திவேல் கூறுகையில்: எனது கடுமையின் உழைப்பால் எனது குடும்பத்தாரை காப்பாற்றி வந்தேன் இன்றைக்கு எனக்கே இந்தநிலை என்பதால் நானும் எனது மனைவி மற்றும் குழந்தைகள் பசி பட்னியால் பரிதவித்து வருகிறோம். . தற்பொழுது உள்ள எனது நிலைமையை கருதி தமிழகமுதல்வர் உதவி செய்ய வேண்டும் அதேபோல் கருணை உள்ளம்படித்தவர்கள் உதவிகரம்நீட்டவேண்டும் என்றார். உதவி செய்ய நினைப்பவர்கள் 9943968871 (எனது நம்பர்) தொடர்பு கொள்ளவும்

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.