துபாய் மற்றும் அமீரகத்தில் டிரைவிங் லைசன்ஸ் புதுப்பிப்பது எப்படி?10 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் அமீரக ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிப்பதற்கான வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமீரகத்தில் செயல்படும் எந்த போக்குவரத்து அலுவலகத்திலோ (Traffic Dept) அல்லது துபையில் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை (RTA) அலுவலகத்திலோ சுமார் 1 மணிநேரத்திற்குள் எளிதாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டியவை:
1. தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவில் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

2. அங்கீகரிக்கப்பட்ட கண் மருத்துவர் (Ophthalmologist) அல்லது கண்ணாடி விற்பனையகத்தில் (Optician) கண் பரிசோதனை செய்து அதன் சான்றிதழை பெற வேண்டும்.

3. உங்களுடைய செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல் ஒன்றும் அதனுடன் உறைவிட விசா நகலும் இணைக்கப்பட வேண்டும். (Valid PP with valid residence visa)

4. உங்களுடைய காலாவதியான அசல் ஒட்டுனர் உரிமத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

5. அதனுடன் எமிரேட்ஸ் ஐடி நகல் இணைக்கப்படுவதுடன் அசல் எமிரேட்ஸ் ஐடியையும் சரிபார்ப்பிற்காக எடுத்துச் செல்ல வேண்டும்.

6. சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இணைக்கப்பட வேண்டும்.

7. நீங்கள் கன ரக வாகனங்களை (Heavy Vehicles) / இயந்திரங்களை (Heavy Mechanical Equipment) இயக்குபவராக இருந்தால் உங்கள் நிறுவனத்தின் தடையில்லா கடிதம் (NOC) ஒன்றையும் இணைக்க வேண்டும்.

8. இவை அனைத்தையும் சமர்ப்பிக்கும் முன்பாக எத்தகைய போக்குவரத்து தொடர்புடைய அபராதங்களும் நிலுவையில் இல்லாமல் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

9. ஓட்டுனர் உரிமத்தை புதிப்பிக்க கட்டணம் 110 திர்ஹம்.

10. மேற்படி ஆவணங்கள் அனைத்தும் சரியாகவும், அபராதங்களும் செலுத்தப்பட்டிருப்பின் 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்பட்ட ஒட்டுனர் உரிமம் உங்களுக்கு கிடைக்கும்.

11. விண்ணப்பதாரர் அனைவரும் மேற்படி ஆவணங்களுடன் நேரில் செல்ல வேண்டும் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

12. ஆன்லைனிலும் விண்ணப்பிக்க அவசியம் கண் பரிசோதனை செய்து அதன் சான்றிதழை இணைக்க வேண்டும்.

Source: 7 Days &
அதிரை நியூஸ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.