துருக்கி நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு செய்து இராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றதாக கூறப்படும் ஃபத்துல்லாஹ் குலன் விரைவில் கைது - துருக்கி!கடந்த ஜூலை மாதம் 15 அன்று துருக்கியில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து இராணுவ ஆட்சியை அமல்படுத்த இராணுவம் முயன்றது. இதில் இராணுவத்தை வழிநடத்தியது மற்றும் கட்டுபடுதியது என்று பல குற்றசாட்டுகள் குலன் மீது எழுந்துள்ளது. ஆட்சி கவிழ்ப்பில் ஈட்டுபட்டதாக கூறி ஜூலை 15 க்கும் பிறகு இதுவரை சுமார் 26,000 நபர்களை துருக்கி அரசு கைது செய்துள்ளது. இதில் இராணுவ வீரர்கள் தான் அதிகம்.

மேலும் குலனை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமேரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று துருக்கி நாட்டு வக்கீல்கள் அமேரிக்காவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டின் மீதும், அதிபர் எர்துகான் மீதும் தொடர்ந்து விமர்சனம் செய்யும் குலன் இந்த குற்றசாட்டுகளை மறுத்துள்ளார்.”எர்துகான் துருக்கியில் சர்வாதிகார ஆட்சி செய்கிறார் “என்று கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று வெளியான இஸ்தான்புல் தலைமை வக்கீல் அலுவலக தகவல் படி:” ஆட்சி கவிழ்ப்பு செய்ய முயற்சித்த இராணுவத்திற்கு கட்டளையிட்டு வழி நடத்தியது குலன் என்று உறுதி செய்யபட்டுள்ளது.” என்றும் ”ஆகையால் அவர் சரணடைவதற்கு முன்பு அவரை கைது செய்து கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று தெரிந்துள்ளது.

அதேபோல் துருக்கி நீதி அமைச்சர் அமெரிக்காவிற்கு “குலன் மீது ஆட்சி கவிழ்ப்பு,சதி செய்தது போன்ற 10 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது அவர் மீது நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்று “ குறிபிட்டு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மேலும் துருக்கி பிரதமர் பின் அலி இல்டிரின் “குலன் தனது வழக்கை எதிர்க்கொள்ள வேண்டும்.இதில் சமரசம் என்ற பேச்சிற்கு வேலையில்லை என்றார்.” இதனை பற்றி முடிவெடுக்க அமெரிக்காவின் துணை அதிபர் விரைவில் துருக்கி வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்க தரப்பில் இம்மாதம் 24 ஆம் தேதி துணை அதிபர் வருவார் என்றும், அதற்கு முன் அமேரிக்காவில் இருந்து சிலர் துருக்கி வந்து குலன் சரணடைவது பற்றி விவாதிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சனிகிழமை அன்று பின் அலி கூறியதாவது” குலன் மீது எடுக்கப்பட்டு நடவடிக்கையில் தான் அமேரிக்கா துருக்கி உறவுகள் வளர்ச்சி உள்ளது.”என்று கூறினார்.அதற்கு அமெரிக்க துருக்கியிடம் குலன் தான் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபாட்டார் என்பதற்கான ஆதாரத்தை கோரியுள்ளது.

இதற்கு முன் அதிபர் எர்துகான்,மற்றும் முன்னாள் பிரதமர் அஹமத் தாவுதோக்லு உரையாடலை ஒட்டுக்கேட்பு பிரச்சனையில் ஈடுபட்ட அமைப்பின் தலைமை பொறுப்பையும் குலன் வகித்துள்ளார் என்பதும் ஆகஸ்ட் மாததிற்கு முன்பு தான் இஸ்தான்புல் நீதிமன்றம் குலனை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்தது என்பதும் குறிப்பிடவேண்டிய செய்தி.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.