திருச்சி- துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை தற்காளிக ரத்துதிருச்சி- துபாய் இடையிலான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையத்தில் நடந்த விபத்து காரணமாக திருச்சியில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமான சேவை நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது. கடந்த 3ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் துபாய் விமான நிலையத்தில் இறங்கும் போது சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓடு பாதையில் மோதி தீப்பற்றியது. இதல் பயணம் செய்த 282 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக விமான நி லையத்தின் ஓடு பாதை சேதம் அடைந்தது. இதனால் அங்கு 3வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரண மாக திருச்சியில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை பாதிக்கப் பட் டது. வழக்கமாக திருச்சி விமான நிலையத் தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கு வந்து 12.55 மணிக்கு துபாய் புறப் பட்டு செல்லும். ஆனால் விபத்து நடந்த புதன் கிழமை அன்று 5 மணி நேரம் தாமதமாக வந்து சென்றது. இதே போல நேற்று முன் தி னம் திருச்சி விமான நிலையத் திற்கு வர வேண் டிய விமானம் 14 மணி நேரம் தாமதமாக வந்து புறப்படும் என ஏர் லைன்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து பயணிகள் தங் களுக்கு உரிய வசதி செய்து கொடுக்க வேண்டும் என கூறி ஏர் லைன்ஸ் அலுவல கத்தை முற் றுகையிட் ட னர்.
பேசசு வார்த்தைக்கு பின் னர் 186 பய ணி கள் ஓட் ட லில் தங்க வைக் கப் பட் ட னர். நேற்று மதி யம் 2.20 மணிக்கு துபாய் செல்லும் ஏர் இந் தியா விமானம் திருச்சி விமானநிலையத்திற்கு வந்து 3.்15 மணிக்கு 186 பய ணிகளுடன் துபாய் புறப் பட்டு சென் றது.
சென்னை -துபாய் விமான சேவை 3வது நாளாக பாதிக்கப்பட்டிருப்பதால் திருச்சி விமான நிலை யத் தில் இருந்து துபாய் செல் லும் பய ணி க ளின் எண் ணிக்கை அதிகரித் திருந்தது. இந் நி லை யில் நேற்றிரவு திருச்சி -துபாய் விமான சேவையை ரதது செய்வதாக ஏர் இந்தியா நிறுவ னம் அறி வித்தது. இதனால் துபாய் செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகள் ஏமாற்றத்து டன் திரும்பிச் சென் ற னர். இன்று துபாய் விமான ஓடு தளத்தின் நிலவரத்தை பொறுத்தே திருச்சி -துபாய் விமான சேவை இயக்கப்படும் என விமானநலைய வட் டாரங்கள் தெரி வித்தன.தகவல்;
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.