ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் ஷார்ஜா சாலைகள்அமீரகத்தில் பொதுவாகவே அலுவலகம் செல்லும் காலை நேரங்கள் நெரிசல் மிகுந்தவை ஒட்டுனர்களின் பொறுமையை சோதிப்பவை. அதிலும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டால் நத்தை வேகம் நிச்சயம். இதற்கு அமீரகத்தின் எந்தப் பகுதியும் விதிவிலக்கல்ல.

அலுவலகம் செல்லும் நேரமும் பள்ளிக்கூடம் செல்லும் நேரமும் ஒன்றாக இருப்பதால் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களைய ஷார்ஜா போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரங்களில் ஷார்ஜாவில் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை அறிந்து களையும் நோக்கில் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் கண்காணித்து இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள 60 சிறப்பு ரோந்துக் காவல் வாகனங்கள் மூலம் நிலைமையை உடனுக்குடன் சரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5 போக்குவரத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ஷார்ஜாவில் அதிக நெரிசல் காணப்படும் இன்டஸ்ட்ரியல் ஏரியாக்கள் போன்ற பகுதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்க அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளன.

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.