அதிரை பேருந்து படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்து கல்லூரி மாணவர் படுகாயம்!அதிரையில் தினசரி மதியம் கல்லூரி முடிந்து வீடு செல்லும் கல்லூரி மாணவர்கள் பெரும் திரளாக பேருந்தில் வீடு செல்வது வழக்கம். அந்த நேரத்தில் அவ்வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நிரம்பி வழியும். மாணவர்கள் இதனால் தினசரி படிக்கட்டு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மணமேல்குடியை சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரி முடிந்து பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். படிக்கட்டில் பயணம் செய்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலைபகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இது போன்ற ஆபத்தான படிக்கட்டு பயணங்களால் அவ்வப்போது இது போன்று விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.