முத்துப்பேட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் உதவி பொருட்கள் வழங்கல்!



 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் கோவிந்தசாமி மற்றும் மோகனாம்பாள் நினைவு கல்வி பணி நாள் மற்றும் மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்விக்குழு தலைவரும் ரோட்டரி மாவட்ட தலைவருமான மெட்ரோ மாலிக் தலைமையில் நடைப்பெற்றது. ரோட்டரி சாசன தலைவர் கிருஷ்ணாமூர்த்தி, தலைமையாசிரியர் கோதண்டராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தான் இபுறாகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் செல்வசிதம்பரம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு உதவி பொருட்கள் மற்றும் கல்வி ஊக்க தொகைகள் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் ரோட்டரி செயலாளர் மணிகண்டன், முன்னாள் தலைவர்கள் பாலகிருஷ்ணன், வேதரெத்தினம், ராமமூர்த்தி அறிசியர்கள் ஆண்டனி, முத்துலட்சுமி, அமிர்தம் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர் முடிவில் ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.




மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.