தலித்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமரின் கண்டனம் மிகவும் கால தாமதமானது: காங்கிரஸ்
தலித் மக்கள் தாக்கப்படுவதற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தாமதமாகப் பேசியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது  தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பசு பாதுகாப்பு என்ற பெயரில் பலர் வன்முறையில் ஈடுபட்டதையும், தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களையும் பிரதமர் நரேந்திர மோடி முன்பே கண்டிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தகைய சமூக விரோத நடவடிக்கைகளை பிரதமர் மோடி முன்பே கண்டித்திருந்தால், விரும்பத்தகாத பல சம்பவங்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார். தனது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடியதாக இத்தகைய சம்பவங்கள் இருந்ததால்தான் பிரதமர் கண்டிக்க முன்வந்ததாகவும் மல்லிகார்ஜூன் கார்கே
விமர்சித்துள்ளார்.
பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் வன்முறை சம்பவங்கள் நடப்பதை நேற்று முன்தினம் கண்டித்த பிரதமர் மோடி, தலித் மக்கள் தாக்கப்படுவதற்கு நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.