துபாயில் இனி மாலை நேரங்களிலும் தங்குமிடங்களில் சோதனை !துபாயின் ரெஸிடென்ஷியல் ஏரியாக்கள் மற்றும் வில்லாக்களில் நடைபெறும் வாடகை வீடுகள் தொடர்பான விதிமீறல் குற்றங்களை கண்டுபிடிக்க மாலை நேரங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுமென துபாய் மாநகராட்சி அறிவித்துள்ளது.

துபாயில் ரெஸிடென்ஷியல் ஏரியாக்கள் எனப்படும் குடும்பத்தினர் மட்டும் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மற்றும் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள வில்லாக்களை பகிர்ந்து (Sharing Basis) கொண்டு வாழும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பிடித்து சட்டப்படி தண்டிக்க மாலை நேர சிறப்பு சோதனை குழுக்களை துபாய் மாநகராட்சி அமைத்துள்ளது.

பொதுவாக, பகலில் தங்குமிடங்களை பூட்டிவிட்டு பெரும்பான்மையோர் வேலைக்குச் சென்றுவிடுவதால் விதிமீறல்களில் ஈடுபடுவோரை சோதனை செய்ய முடியாமல் போவதாலேயே மேலதிகமாக இந்த மாலை நேரக் சோதனைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

இந்த சிறப்பு சோதனைக் குழுக்கள் மாலை நேரங்கள் மட்டுமின்றி வார விடுமுறை தினங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.