சவுதி அரேபியாவில் உள்ள அரசு இருதய மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் தேவைசவுதி அரேபியாவில் உள்ள அரசு இருதய மருத்துவமனைகளுக்கு சிறப்பு டாக்டர்கள் தேவைப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு இருதய மருத்துவமனைகளுக்கு அனுபவம் பெற்ற கன்சல்டண்ட், சிறப்பு டாக்டர்கள், மயக்க டாக்டர்கள், தீவிர கண்காணிப்பு பிரிவு டாக்டர்கள், ரெசிடெண்ட் மருத்துவ பிரிவில் எம்.பி.பி.எஸ். + டிப்ளமோ, எம்.பி.பி.எஸ். + முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்ற டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும் இருதய பிரிவு டெக்னீஷியன்களான பியூசனிஸ்ட், கேத்லேப், கார்டியக் எக்கோ, கார்டியக் மயக்க மருத்துவம், ரெஸ்பிரேட்டரி தெரபிஸ்ட், பி.எஸ்.சி. தேர்ச்சியுடன் 3 ஆண்டு அனுபவத்துடன் 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் கன்சல்டண்ட், டாக்டர்களுக்கு ரூ.4.10 லட்சம் முதல் ரூ.5.42 லட்சம் வரையிலும், சிறப்பு டாக்டர்களுக்கு ரூ.2.46 லட்சம், ரெசிடெண்ட் டாக்டர்களுக்கு ரூ.1.13 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரை மாத சம்பளத்துடன் குடும்ப விசா, டெக்னீஷியன்களுக்கு ரூ.1.85 லட்சம், செவிலியர்களுக்கு ரூ.72 வரை இலவச விமான பயணச்சீட்டு, இலவச இருப்பிடம் மற்றும் சட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், ஒரு புகைப்படம் ஆகியவற்றை ovemclsn@gmail.com

இ.மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இந்நிறுவன இணையதள முகவரியிலோ அல்லது 044 22505886, 22502267, 8220634389 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ அறியலாம் என நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கேசவன் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.