மாமியாரை திருமணம் செய்து கொண்ட மருமகன்: விவாகரத்து கோரி மனுத்தாக்கல்
பீகார் மாநிலத்தில் மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்து அவரையே திருமணம் செய்துகொண்ட மருமகன், தற்போது விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தை சேர்ந்தவர் சுராஜ் மேத்தா(22). இவர் மருவாகி கிராமத்தை சேர்ந்த சுரேந்திர மேத்தா, ஆஷா தேவியின் மகள் லலிதா குமாரியை கடந்த 2013ம் ஆண்டு யூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான அடுத்த ஆண்டு லலிதா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
மகளுக்கு உதவி செய்த வந்த ஆஷா, மருமகனுடன் காதல் வயப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்த இவர்கள், யூன் மாதம் ஊரைவிட்டு ஓடியுள்ளனர்.
சில நாட்கள் கழித்து திரும்பி வந்த இவர்கள், பஞ்சாயத்து முன்னிலையில் நிறுத்தப்பட்டனர், அப்போது தனது மருமகனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக ஆஷா தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் ஒருவரையாருவர் காதலிப்பதால் ஊர் பஞ்சாயத்தும் இதனை ஒப்புக்கொண்டது.
இவர்களின் இந்த செயலால் குடும்பத்தினர் கடும் கோபம் கொண்டு, இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த இவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்துகொண்டு பிரிந்துவிட முடிவு செய்துள்ளனர்.
அதன்படியே, கடந்த யூன் 23 ஆம் திகதி இவர்கள் இருவரும் சேர்ந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.