ஸ்ரீராமசேனா மிரட்டல்: கிறிஸ்தவ நிர்வாக பள்ளிக்கூடத்தில் அரபு மொழி பாடம் நிறுத்தம்!மங்களூர்:ஸ்ரீராமசேனா இந்துத்துவ கும்பலின் வன்முறை மற்றும் மிரட்டலால் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் செயிண்ட் தாமஸ் எய்டட் ஹையர் ஃப்ரைமரி பள்ளிக்கூடத்தில் அரபு மொழி கற்பிப்பது நிறுத்தப்பட்டது.நேற்று அரபு மொழிக்கான வகுப்பு நடைபெறவில்லை.இனி அரபு மொழி பாட வகுப்பு நடத்தவேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 30-ஆம் தேதி இப்பள்ளிக்கூடத்தில் அத்துமீறி நுழைந்த ஸ்ரீராமசேனா குண்டர்கள் அரபு மொழி பாட வகுப்பை தடுத்தனர்.இது தொடர்பாக 16 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.ஆனால், வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று ஸ்ரீராமசேனாவின் மாநில தலைவர் மகேஷ் குமார் கோப்பா மிரட்டல் விடுத்திருந்தான்.
நூற்றாண்டு பாரம்பரியமிக்க இப்பள்ளிக் கூடத்தில் 1 முதல்7 வரையிலான வகுப்புகளில் 160 மாணவர்கள் பயிலுகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக இங்கு அரபு, ஜெர்மன், பிரெஞ்சு மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.கடந்த நான்கு மாதங்களாக பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜெர்மன், பிரெஞ்சு மொழிகள் கற்பிப்பது நிறுத்தப்பட்டது.அரபு மொழி பாடம் விரிவுப்படுத்தப்பட்டு 40 மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்நிலையில் ஸ்ரீராமசேனாவின் மிரட்டலால் அரபு மொழி பாட வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.