இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்று தந்த மல்யுத்த வீராங்கனை!ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த சாக் ஷி மாலிக் 58 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற 58 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாக் ஷி மாலிக் கிர்கிஸ்தான் நாட்டின் டைனிபெக்கோவாவுடன் மோதினார். இப்போட்டியில் சாக் ஷி 5-4 என்ற புள்ளிக்கணக்கில் கிர்கிஸ்தான் நாட்டு வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை சாக்சி பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் சாக் ஷி. இவர் 2014ஆம் ஆண்டு நடந்த கிளாஸ்காவ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்சி மாலிக் - டின்பெக்கோவா இடையேயான போட்டியை ஹரியானாவில் உள்ள அவரது குடும்பத்தினர் தொலைக்காட்சி மூலமாக பார்த்துக் கொண்டிருந்தனர். சாக்சி வெற்றி பெற்றதை அடுத்து மகிழ்ச்சியில் துள்ளக்குதித்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நாட்டிற்கும் தங்களுக்கும் சாக் ஷி பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இதன் மூலம் ரியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா தற்பொழுது 70வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சாக் ஷி வெற்றி பெற்றது குறித்து அவரது குடும்பத்தாரும் முன்னாள் பயிற்சியாளரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வெற்றி சாக் ஷியின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித்தந்த சாக்‌ஷிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார், மேலும் சாக் ஷி-க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஒலிப்பிக் பதக்கம் வென்றதன் மூலம் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார் சாக் ஷி.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.