அதிரை துப்புரவுப் பணியாளர்கள் சம்பள பாக்கியை வழங்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள 1 முதல் 21 வார்டுகளில் குவியும் குப்பை கூளங்கள், கழிவுகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதில் நிரந்தர ஊழியர்கள் 21 பேர்களும், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் 54 பேர்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் இரு வேறு குழுக்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 230 வீதம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் பணியாற்றிய ஊழியர்கள் சம்பளத்தில் 4 நாட்கள் பிடித்தம் செய்துகொண்டு ஊதியம் வழங்கியதால் அதிருப்தி அடைந்த தற்காலிக ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை முதல் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடந்தது. இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக இன்று காலை தினமணி நாளிதழில் செய்தி பிரசுரமாகியது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தால் பிடித்தம் செய்த 4 நாட்கள் சம்பள பாக்கியை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் இன்று மதியம் பணிக்கு திரும்பினர். பணி நிறுத்தம் செய்தியை சம்பந்தப்பட்டோரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, கோரிக்கை நிறைவேற உதவிய தினமணி நாளிதழுக்கு ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.