பாஜகவின் பாசிச ஆட்சியில் சிறுபான்மையினர் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன: திருமாவளவன் குற்றச்சாட்டு!மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க, மதச்சார்பற்ற சக்திகளுக்கு அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை வாசித்த திருமாவளவன், இந்துத்துவத்தின் இலக்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்ல தலித்துகளும்தான் என கூறினார். பாரதிய ஜனதா ஆட்சியில் மத வன்முறைகள் அதிகரித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வருவதன் மூலம், பாரதிய ஜனதாவின் கூட்டாளியாக அதிமுக செயல்படுவதாகவும் திருமாவளவன் விமர்சித்தார்.

இந்த மாநாட்டில் பேசிய வைகோ, காஷ்மீரில் அமைதியற்ற சூழல் உருவாகி இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என குற்றம்சாட்டினார். காஷ்மீரின் அரசியல் எதிர்காலம் குறித்து அம்மாநில மக்களே முடிவெடுப்பதற்கு ஏற்ப பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று இந்திய அரசு அளித்த வாக்குறுதி ஏன் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் வைகோ கேள்வி எழுப்பினார்

பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடு அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மைக்கு எதிராக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டனார். ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரின் பாதையில், பிரதமர் நரேந்திர மோடி பயணிப்பதாக விமர்சித்த அவர், இத்தகைய பாதை ஒருபோதும் நிரந்தர வெற்றியைத் தராது என குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தோல்வி அடைந்த போதிலும், அதற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாகத் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.