ஒரு விக்கெட் காலி - வெடிகுண்டு தயாரித்த பா.ஜ.க. தீவிரவாதி குண்டு வெடித்து சாவுவீட்டில் ரகசியமாக வெடிகுண்டு தயாரித்த பா.ஜ.க. தீவிரவாதி குண்டு வெடித்து சாவு

கேரளாவில் வீட்டுக்குள் ரகசியமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்துவந்த பா.ஜ.க.  தீவிரவாதி குண்டு வெடிப்பில் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், கூத்தப்பரம்பு பகுதியில் வசித்துவருபவர் தீக்‌ஷித்(27). பா.ஜ.க. தொண்டரான இவரை உடல் சிதறிய நிலையில் நேற்று சிலர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தீக்‌ஷித் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கூத்தப்பரம்பு பகுதியில் உள்ள தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தபோது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கு தீக்‌ஷித் பலியான தகவல் தெரியவந்தது. இந்த விபத்தில் அவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததாக தெரிவித்துள்ள போலீசார், இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.