மீண்டும் சாதிய உணவுர்களை தளிர்க விடும் பிராமண குடியிருப்பு
கர்நாடகாவில் பெங்களூருக்கு வெளியே கடந்த 2013 இல் தி வேதிக் வில்லேஜ் – ஷங்கர் அக்ரஹாரம் என்ற பிராமணர்களுக்கு மட்டுமான குடியிருப்பு திட்டமிடப்பட்டது. அப்பொழுதே இந்த குடியிருப்புகளை எதிர்த்து வழக்கறிஞர் குழு மற்றும் மனித உரிமை அமைப்புகள் சாதி பாகுபாடுகளை வளர்க்கும் இந்த திட்டத்திற்கு உடனடியாக தடை போட வேண்டும் என்று மாநில அரசிடம் முறையிட்டன.
மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது வேதிக் வில்லேஜ் திட்டம் ஏறத்தாள முடிவடைந்த நிலையில் கர்நாடகாவின் நகர திட்டமிடுதல் துரையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. மேலும் இங்கு மொத்தமுள்ள 1800 வீடுகளில் 900 வீடுகள் விற்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு நிதிஉதவி அளிப்பது சனாதன தர்மா பரிரக்ஷனா ட்ரஸ்ட் எனும் பிராமண குழுவாகும். இக்குழுவின் நோக்கமாக “பிராமண சமூகம் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலையும், வாழத் தகுதியான சுற்றுப்புறத்தையும் வருங்கால சந்ததியினருக்கான சொத்தாகவும் வழங்குவது” என்று தெரிவித்துள்ளது.
இந்த குடியிருப்பு திட்டத்தின் கீழ் பிராமணர் அல்லாதவருக்கு வீடு வழங்கப்படுவது இல்லை. அதோடு மட்டும் நில்லாத அவர்கள் தங்களது விளம்பரங்கள் அனைத்திலும் உயர் சாதியினருக்கான குடியிருப்பு என்பதனை திரும்ப திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.
இந்த குடியிருப்பை விற்பனை செய்பவரான நிதேஷ் இந்த குடியிருப்பு குறித்து கூறுகையில், “இங்கு வீடு வாங்க குடும்பத்தில் ஒருவராவது பிராமணராக இறுகக் வேண்டும். இங்கு பணியாற்றும் பணியாட்கள் பிராமணராக இருக்க அவசியம் இல்லை. அந்தளவிற்கு நம்மால் கட்டுப்பாடுகள் விதிக்க இயலாது. மேலும் பிராமணர்கள் தெருவை துப்பரவு செய்ய மாட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.

மேலும் இவர்களது இனைய தளத்தில் பிராமண குடியிருப்பில் வீடு வாங்குவதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமானதாக, “இது இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை தொடங்கிய பிராமணர் நாராயண மூர்த்தி பிறந்த இடம் என்று கருதப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பு குறித்து முதலில் தனது எதிர்ப்பை தெரிவித்தவரான உச்சநீதி மன்ற வழக்கறிஞர்  கே.வி.தனன்ஜெய் மாநில அரசு, மனித உரிமை அமைப்பு, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதியுள்ளார். உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இந்த பிரச்சனை குறித்து சமூக நீதி மற்றும் முனேற்றதிற்கான அமைச்சகத்திடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லை என்று கூறுகிறார் தனன்ஜெய்.
இது குறித்து கே.வி.தனன்ஜெய் கூறுகையில், “இந்தியாவிலேயே கர்நாடகாவில் தான் நில பயன்பாடு குறித்து பல கட்டங்களில் பல அடுக்குச் சட்டங்கள் உள்ளன. ஒரு குடியிருப்பு திட்டத்திற்கு பல அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படியிருக்க இந்த ஷங்கர் அக்ரகாரம் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது. விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த திட்டமானது எந்தவித பொது நலன்களையும் நியாப்படுத்தவில்லை. இதில் என்ன திகைபிற்குரிய விஷயம் என்றால் இந்த திட்டத்திற்கு எந்த தடையும் போடப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
வேதிக் வில்லேஜ் திட்டத்திற்கு பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2013 தங்களை மத சார்பற்றவர்களாகவும், சாதிய எதிர்பாளர்களாகவும் காட்டிக்கொள்ளும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னும் கூட இதற்கு எந்த வித தடையும் போடப்படவில்லை.
இது போன்ற தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புக்கள் இந்தியாவிற்கு புதிதில்லை தான். 2002 குஜராத் கலவரங்களுக்கு பிறகு முஸ்லிம்களுக்கு மட்டுமான பாதுகாப்பான குடியிருப்புக்கள் என்று புதிதாக குடியிருப்புக்கள் முளைத்தன. ஆனால் இது போன்ற குடியிருப்புக்கள் மீண்டும் ஒரு சாதிய சமூகத்தை உருவாக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளனர்.
முன்னர் ஆந்திராவில் இது போன்ற குடியிருப்பு ஒன்று ஏற்படுத்த இருப்பதாக கூறி ஷர்மா என்பவர் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.