பேருந்தின் உச்சியில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள்!பேருந்தின் உச்சியில் சரக்கு மூடைகளாக பயணிக்கும் இராஜாமடம் அண்ணா யுனிவர்சிட்டி கல்லூரி மாணவர்கள்!
இதுபோன்ற அவலங்கள் அடிக்கடி இப்ராஹீம் என்கிற பேருந்தில் நடக்கிறது. இந்த பேருந்து சரியாக 4:00 மணிக்கு கல்லூரி விடும் நேரத்தில் வருகிறது. இந்த தவறை அந்த பேருந்தில் வேலை செய்யும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கண்டு கொள்வதில்லை.
கல்லூரிக்கு செல்லும் நோக்கமே தனது அறிவை வளர்த்துக் கொள்ளவும், நல்ல பண்பாட்டுடன் வாழவும், தான் உயர்ந்த அந்தஸ்துடன் இச்சமூகத்தில் வாழ்ந்து இத்துடன் தனது வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று தனது குடும்பத்தை மகிழ்ச்சியுடன் நடத்துவதற்கே நாம் செல்கிறோம்.
முட்டாளாக வாழ்வதற்கு அல்ல!
ஆனால் இதுபோன்ற அறிவிழந்த மாணவர்கள் செய்யும் முட்டாள்தனமான செயலால் பிற மாணவர்களுக்கும் ஓர் அவப்பெயர். இதனால் ஓர் அசம்பாவிதம் நடந்து விட்டால் இதில் பாதிக்கப்படுவது யார்?
அந்த முட்டாள் மாணவனும், அவரின் குடும்பத்தார்கள் மட்டுமே! இதனை அந்த பேருந்து நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தவறை காவல்துறையினரிடம் தெரிவித்து இதுபோல் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் மீதும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் புகார் கொடுக்கப்படும்.

Thanks To: FB - Iniyavan Thanjai
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.