ஷார்ஜாவில் விரைவில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் !அபுதாபியை தொடர்ந்து ஷார்ஜாவிலும் குளிரூட்டப்பட்ட பஸ் நிறுத்தங்களை நிறுவ முடிவு செய்துள்ளதாக ஷார்ஜா ஊரக வளர்ச்சித்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 172 பஸ் நிறுத்தங்களிலிருந்து பயணிகள் அதிகம் பயன்படுத்தும் 28 தெரிவு செய்யப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் முதற்கட்டமாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஷார்ஜா ஊரக வளர்ச்சித்துறை (SUPC), ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்துத்துறை (SRTA), ஷார்ஜா மின்சாரம் மற்றும் தண்ணீர் வாரியம் (SEWA) ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர். முழுக்க முழுக்க சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் சேமிக்கப்படும் மின்சாரம் இந்த பஸ் நிறுத்த குளிரூட்டிகளை இயக்கப் பயன்படுத்தப்படும்.

தினமும் சுமார் 176,000 பேர் பயன்படுத்தும் மேற்காணும் 28 பேருந்து நிறுத்தங்களிலும் மேலதிக சேவையாக பேருந்து நேர அட்டவணை மற்றும் பஸ் தடங்கள் குறித்த அறிவிப்புகளை மின்னனு தகவல் பலகை (Electronic Bulletin Board) வழியாக தொடர்ந்து அறிவிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.