நாட்டில் கற்பழிக்கிறவன தண்டிக்காமல் "அதற்கு பதிலாக என்னை கற்பழியுங்கள்" என ஓர் அரசு சொன்னால் என்னவென்று சொல்வோம்?-திருமாவளவன்புதிய கல்விக் கொள்கையால் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்குப் பெரும் கேடு

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும்

தொல்.திருமாவளவன் அறிக்கை

இந்தியாவில் ஒரே மொழி, ஒரே பண்பாடு என்கிற ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கல்விக் கொள்கையை ஒரு கருவியாக மோடி அரசு கையிலெடுத்திருப்பது பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்ட இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கக்கூடியதாக அமைந்துவிடும். ‘தேசிய கல்விக் கொள்கை உருவாக்கம்’ என்கிற பெயரில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மைய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை முன்னோட்டமாக உருவாக்கி அதில் சமற்கிருதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பழம்பெரும் மொழியான தமிழ் மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளில் 24 மொழிகளை  இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்திருக்கிறது.  அவ்வாறிருக்கையில் பேச்சுவழக்கில் இல்லாத சமற்கிருதத்தை மட்டுமே இந்திய மக்களுக்கான ஒற்றை பொது மொழியாக்குவதற்கு மோடி அரசு முனைவது ஏற்புடையதல்ல. சமற்கிருதம் என்பது மொழிமட்டுமல்ல, அவை மனுதர்மக் கோட்பாட்டையும் வேத இதிகாசங்களையும் உள்ளடக்கியதாகும்.  ஆக, சமற்கிருதத்தைக் கற்றுக்கொள்வதன் மூலம் மனுதர்மக் கோட்பாட்டைக் கற்பித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான பண்பாட்டை இந்தியப் பண்பாடாகத் திணிக்கும் முயற்சியே புதிய கல்விக் கொள்கையாகும். 

அத்துடன், குலத் தொழில்களைப் பாதுகாக்கும் சாதியக் கட்டமைப்பை எதிர்த்து புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் உள்ளிட்ட எத்தனையோ தலைவர்கள் நாடு முழுவதும் போராடியதன் விளைவாகவே அனைவருக்குமான சமமான கல்விக் கொள்கை கிடைத்தது. அத்தகைய சமத்துவ கல்விக்கொள்கையை ஒழித்துக் கட்டுவதுடன் வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி என்று பள்ளிப் பருவத்திலேயே குடும்பத் தொழிலை கற்கவேண்டுமென்று குலத்தொழிலைச் செய்யவைப்பதுடன் உயர்கல்வி கற்கும் முறையை ஒழித்துக்கட்டுவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருக்கிறது.   மேலும், அது இருபாலர் கல்விக்கூடங்களை ஒழித்துக்கட்டி பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பதற்கும் வழிவகை செய்கிறது.  அத்துடன், சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடு கிடைக்காத மாணவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதைத் தடுத்து நடுவர்மன்றத்தில் முறையிடும் புதிய போக்கினை வலியுறுத்துகிறது.

மொத்தத்தில் கல்வியை காவிமயமாக்குவதுடன் மொழிவழிக் கல்வி முறையை ஒழித்துக்கட்டுவது அனைத்து மொழிகளையும் அழித்து சமற்கிருதம் மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக காலப்போக்கில் நடைமுறைக்குக் கொண்டுவரும் திட்டமே புதிய கல்விக் கொள்கையாகும். ஆகவே, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் பாதுகாக்கவும், கல்விக் கொள்கையின் 1976ல் பறிபோன மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும் தமிழக அரசு நாளைய தினம் கொண்டுவரும் கல்வி மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.