கேரளாவில் மத கலவரத்திற்கு திட்டமிட்டு மதரசாவை முற்றுகையிட்ட இந்து தீவிரவாத பார்ப்பனீய கூட்டங்கள்.. - படங்கள்
கேரளாவின் மஞ்சேரியில் இயங்கி வரும் இஸ்லாமிய கல்வி நிலையத்தில் சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் நடப்பதாக கூறி அந்த இடத்தை முற்றுகையிட ப்போவதாகவும் , கல்வி நிலையத்தை தாக்கப்போவதாகவும் கூறி கேரளா மாநில பாஜக தலைவரின் தலைமையில் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட அனைத்து பார்ப்பனீய அமைப்புக்களும் ஆயிரக்கணக்கில் கூடுவதாக அறிவித்தது..
இதனிடையே ஆர் எஸ் எஸ் சின் சூழ்ச்சியை உணர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஆர் எஸ் எஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான தொண்டர்களை நிறுத்தியது.. ஒருவேளை பார்ப்பனீய கூட்டங்கள் தாக்குதலில் ஈடுபடும் பட்ஷத்தில் எதிர்தாக்குதலுக்கு தயார் என்று அறிவித்தது .. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கேரளா காவல்துறை கல்வி நிலையத்தை சுற்றிலும் காவல்துறையை குவித்து பார்ப்பனீய கூட்டங்கள் முன்னேற விடாமல் தடுத்து பெரும் மோதலை தடுத்தது..
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோட்டயம் பகுதியை சேர்ந்த அகிலா என்ற ஹிதாயா என்ற பெண் மஞ்சேரியில் உள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தில் சேர இருப்பதாகவும் அவரது பெற்றோர் மூலம் வழக்கு பதியப்பட்டது.. இதை விசாரித்த நீதிமன்றம் அப்பெண்ணை கல்விக்கூடத்தில் இருந்து மீட்குமாறும் வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களில் சேரும் முன் கண்டறியுமாறும் நாளைக்குள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறும் கேரளா காவல்துறைக்கு உத்தரவிட்டது..
இதனால் துரிதமாக விசாரணையில் இறங்கிய காவல்துறை சோதனையின் முடிவில் இஸ்லாமிய கல்விக்கூடத்தில் அந்த பெண் இல்லை என்று கூறியது.. மேலும் அந்த பெண் சேலத்தில் தான் படித்து வரும் கல்லூரியில் இருப்பதும் தெரியவந்தது.. இந்த பெண்ணை காரணம் காட்டி இன்றய மத கலவரத்திற்கு பார்ப்பனீய அமைப்புக்கள் ஈடுபட திட்டமிட்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.. இதற்கு முன் திருவனந்தபுறத்தில் செயல்பட்டு வரும் இதே இஸ்லாமிய கல்விக்கூடத்தில் வேறொரு பெண்ணை காரணம் காட்டி இதை போன்ற வன்முறை வெறியாட்ட்டத்தில் இறங்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..
ஒரு பக்கம் லவ் ஜிஹாத் என்ற பெயரில் மத கலவரத்திற்கு திட்டமிடுவதும் , மறுபக்கம் மாட்டை வைத்து கலவரத்திற்கு திட்டமிடுவதும் , என பார்ப்பனீய கூட்டங்கள் மக்களை பிரித்து எப்படியேனும் தங்களின் தங்கள் கொடூர திட்டத்தில் சுயநல அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர் போலும்..
எது எப்படியோ கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்திலேயே பொய்களின் மூலம் மத வெறி கலவரத்திற்கு திட்டமிடும் பார்ப்பனீய கூட்டங்கள் அவர்கள் ஆளும் மாநிலத்தில் எந்த அளவுக்கு கொடுமைகளில் இறங்குவார்கள் என்பதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது..

பாஜகா விற்கு இந்திய திரு நாட்டை ஆள்வதற்கு சந்தர்பம் கிடைத்திருக்கும் வேலையில் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க வேண்டுமே தவிர நாட்டில் கலவரங்களை தூன்டி மக்களை பிரித்து ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற பாசீச சிந்தனையை இந்த நாட்டின் மேல் பற்றுள்ள மக்கள்  ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் எனபதே உண்மை. காவிகளும் பாசீச சக்திகளும் நாட்டிலிருந்து துடைத்தெரியும் காலம் வெகுதொலைவில் இல்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.