கருப்பு முருகானந்தம் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய வாலிபர் கைதுதேசிய கொடியை எரித்து முன்பு கைதானவர்  முகநூலில் அவதூறு பரபியவர் கைது செய்யப்பட்டவர்

சுவாதி கொலை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்தவர் கருப்புமுருகானந்தம். இவர் பா.ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில் சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கருப்பு முருகானந்தத்தை சம்பந்தப்படுத்தி முகநூலில் (பேஸ்புக்) நாகை மாவட்டம் தெற்குபொய்கை நல்லூரை சேர்ந்த மதிவாணன் மகன் திலீபன்மகேந்திரன்(வயது26) என்பவர் அவதூறாக தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருப்பு முருகானந்தம் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

கைது
இதன்பேரில் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திலீபன்மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் மற்றும் நில அபகரிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் தலைமையில், திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, நில அபகரிப்பு இன்ஸ்பெக்டர் செல்வராசு மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கருப்பு முருகானந்தம் பற்றி அவதூறான தகவல்களை முகநூலில் திலீபன்மகேந்திரன் பரப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட திலீபன்மகேந்திரன் ஏற்கனவே தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.