இறை அருளால் விபத்திலிருந்து தப்பியது கத்தார் ஏர்லைன்ஸ் !எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விபத்தை தொடர்ந்து சமீப நாட்களில் பல அரபு நாட்டு விமானங்கள் ஆபத்துகளில் சிக்கி இறையருளால் பாதுகாப்பாய் மீண்டு வருகின்றன. அப்படியொரு நிகழ்வு பயணிகள் சேவையில் சிறந்து விளங்கும் உலகின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்திற்கும் ஏற்பட்டது.

கடந்த வியாழன் அன்று துருக்கியின் இஸ்தான்புல் அத்தாதுர்க் விமான நிலையத்திலிருந்து கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட கத்தார் QR240 விமானத்தில் பறவை ஒன்று மோதியதால் எஞ்சினில் தீ ஏற்பட உடனடியாக மீண்டும் இஸ்தான்புல் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரை இறக்கப்பட்டது என கத்தார் ஏர்லைன்ஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.