இஸ்லாமியர்களின் தலாக் என்னும் விவாகரத்து முறைக்கு எதிரான வழக்கு. இன்று விசாரனை!



மூன்று முறை, ‘தலாக்’ என கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறையை எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்துள்ள வழக்கை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது.

மூன்று முறை, ‘தலாக்’ எனக் கூறி, விவாகரத்து பெற்றுக் கொள்ளும் முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, ‘நோட்டீஸ்’ அனுப்பிஉள்ளது.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் என்ற பெண் தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதிகள், அனில் தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற அமர்வு, வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக கூறியுள்ளது.

மனுவில் இஷ்ரத் ஜகான் கூறியுள்ளதாவது: என் கணவர், தொலைபேசியில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்து விட்டார். ஏழு முதல், 12 வயதுள்ள என் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனை, தன் கட்டுப்பாட்டில் அவர் வைத்து உள்ளார். முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் இந்த விவாகரத்து முறையால், என்னைப் போல, நாடு முழுவதும் பல பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டப் பிரிவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

தனிநபர் சட்டம், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் அறிவிக்க வேண்டும். என் கணவர் தொலை பேசியில் மூன்று முறை தலாக் என்று கூறி பெற்ற விவாகரத்து செல்லாது என்று அறிவிப்பதுடன், எனக்கும், என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

-தினமலர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.