அமீரகத்தில் வேலையிலிருந்து விலக விரும்பினால் ராஜினாமா கடிதம் கட்டாயம் ஏற்கப்பட வேண்டும்அமீரகத்தில் பணிபுரிகின்ற யாரும் தங்களுடைய பணியிலிருந்து சுயமாக விடுவித்து கொள்ள விரும்பினால் ராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் எந்த நிறுவனமும் அதை ஏற்றே ஆக வேண்டும் மறுக்கக்கூடாது என அமீரக மனிதவள அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

அதேவேளை ஒருவர் தன்னுடைய நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பு காலத்தை (Notice Period) பரஸ்பரம் நீட்டித்துக் கொள்ள சம்மதித்தால் அதை அதிகாரபூர்வமாக நிறுவனத்திடமிருந்து ஊழியர்கள் எழுதி வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றாலும் தொடர்ந்து 6 மாதங்கள் ராஜினாமா செய்த பின்பும் பணியாற்றினால் ஊழியர்கள் விண்ணப்பித்த ராஜினாமா கடிதம் தானாகவே காலாவதி ஆகிவிடும் என்றும் ஊழியர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை தொலைநகல் (Fax) வழியாகவோ, அஞ்சல் (Mail) வழியாகவோ, மின்னஞ்சல் (e-mail) வழியாகவோ அனுப்பிய விபரங்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.