விபத்தில் பலியானவர்களின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் மர்ம மனிதர் யார்?கரூர் அருகே இன்று பாலத்தில் கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர். அதேநேரத்தில், பலியானவர்களின் கையில் இருந்த மோதிரத்தை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் தம்பதியினர் சொந்த வேலை காரணமாக தஞ்சை சென்று விட்டு, கார் ஒன்றில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கந்தர்வகோட்டை மெய்இடிபட்டி சாலையை கடந்தபோது கார் பாலத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அப்போது, விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மற்றவர்கள் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒருவர் இறந்துகிடந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை உருவினார். கூட்டத்தில் பலர் திரண்டிருந்த நேரத்திலும், மிகவும் சிரமப்பட்டு மோதிரத்தை பறித்தது புகைப்படத்தில் தெளிவாக பதிவாகியுள்ளது.

அடுத்த புகைப்படத்தில் மோதிரமின்றி அந்த பெண் உயிரிழந்து கிடப்பதையும் காண முடிகிறது. அதுமட்டுமின்றி, மோதிரத்தை திருடிய நபர் திமுக கரை வேட்டி கட்டியிருப்பதும் புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.

 விபத்து நடந்தவுடன் உதவிக்கு ஓடிவரும் நபர்களிடையே, இப்படிப்பட்டவர்களும் இருப்பது மனிதநேயம் குறித்த கேள்வியை நம்முன் எழுப்புகிறது. இதைப் பார்க்கும்போது, இன்றைய காலத்தில் மனிதநேயம் மெல்ல செத்து வருகிறதோ என்ற கேள்வியை பலமாக எழுப்புகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.