டேய் துலுக்க பையா ” என்றுதான் அழைக்கிறோம் யார் இந்த துலுக்கன்? ?
யார் இந்த துலுக்கன்? ?

ஒரு இந்து சகோதரனின் மனம் திறந்த பதிவு!!!

நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே ” டேய் துலுக்க பையா ” என்றுதான் அழைக்கிறோம். துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல் செய்வதாக நினைக்கிறோம்.

இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர். எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களை தெரியும்.

என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை.

அப்படி யாராவது ஒரு சிலர் கடைபிடித்துவிட்டால் ” அப்பா , அவர் ரொம்ப நேர்மையானவர்பா “, என்று கூறும் அளவிற்குதான் நாம் உள்ளோம்.

அவர்களுடைய பொருளாதார, கல்வி, நிலையை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தாழ்த்தப்பட்ட , மலைவாசி மக்களை விட மிக மோசமாக இருக்கிறார்கள்

மதம் அவர்களை பல வழிகளில் தடுப்பதால் மிக நேர்மையாக பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அவர்களுக்கு வீடு வாடைகைக்குகூட நம்மில் யாரும் கொடுப்பதில்லை.

கேட்டால் அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்போம்.

அவர்கள் மத வெறி பிடித்தவர்கள் அல்ல.

மார்க்க நெறியை பின்பற்றுபவர்கள்.

அவர்களுடைய மார்க்க நெறியை நம்மால் ஒருநாள் கூட கடைபிடிக்க முடியாது.

அடுத்தது தீவிரவாதம். தீவிரவாதம் எங்கு தான் இல்லை?

ஒரு புழுகூட தாக்கபட்டால் சற்று நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.

பா.ம.க எப்படி வளர்ந்தது?

வாண்டையார்கள் எப்படி வளர்ந்தார்கள்?

மூப்பனார்கள் எப்படி வளர்ந்தார்கள் ?

தேவர்கள் மற்றும் முக்குலத்தோர் எப்படி வளர்ந்தார்கள்?

விடுதலை சிறுத்தைகள் எப்படி வளர்ந்தார்கள் ?

இதெல்லாம் தீவிரவாதம் இல்லையா?

எங்கோ ரேஷன் கடையில் கடைசியில் நிற்கும் ஒரு இஸ்லாமியரை நாம் தீவிரவாதியாக பார்க்கிறோம்.

இவர்கள் மட்டும் யார்?

சில தலைமுறைகளுக்கு முன் நம் உறவினர்களாக இருந்தவர்கள்தான்.

இதைத்தான் மானுடவியலும் அறிவியல் பூர்வமாக சொல்கிறது.

நிச்சியமாக இங்கே இருக்கும் இந்த தினகரனின் ஜீனும், எங்கோ உள்ள அப்துல்லாவின் ஜீனும் ஒன்றாகவே இருக்கும்.

என்னுடன் பழகும் இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் மனதார தீவிரவாதத்தையும், கொலை செயலையும் மிக கடுமையாக எதிர்கிறார்கள்.

சகோதரத்துவத்தையே அவர்கள் விரும்புகிறார்கள்.

ஒரு காலத்தில் இஸ்லாம் துருக்கியை தலைநகராக கொண்டு இருந்தபோது துருக்கியன் என்று அழைக்கபட்டர்கள்.

அது மருவி துலுக்கன் என்றாகிவிட்டது.

இது ஒன்றும் கேலிக்குரிய வார்த்தை அல்ல.

மகாகவி பாரதிகூட தன்னுடைய படைப்புக்களில் “திசை பார்த்து கும்பிடும் துருக்கியன்”, என்று குறிப்பிட்டுள்ளார். (அவர், மூஸ்லிமகளின் தொழுகை நியதிகளை அறிந்திராத நிலையில் கூறியது)

ஆகவே நண்பர்களே ! பிறந்துவிட்டோம். 60 ஆண்டு காலமோ அல்லது 70 ஆண்டு காலமோ நம் வாழ்கை. மிக சிறிய வாழ்கை. ஒரு ஆமைகூட 400 ஆண்டுகள் வாழ்கிறது. அந்த வாழ்க்கைகூட நமக்கு கிடையாது.

இதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய்விடுகின்றது. இருக்கும் சில ஆண்டுகளையாவது சகோதரத்துவத்துடன் எல்லோரையும் அரவணைத்து செல்வோம்.

ஒரு இஸ்லாமியருக்கு சலாம் சொல்லிபாருங்கள். அப்புறம் தெரியும் அவர்களுடைய அருமையும், பெருமையும் .     நன்றி அப்துல் அஜிம்
⁠⁠⁠⁠12:34 PM⁠⁠⁠⁠⁠
⁠⁠[3:39 PM, 8/2/2016] +971 55 323 8456: ⁠⁠⁠ஒவ்வொரு மனிதனும் எமது உள்ளத்தில் சில கேள்விகளை தொடுப்போம்?

 ஃபஜ்ர் தொழுகையை பள்ளியில் போய் ஜமாஅத்தோடு தொழுதால் அன்றைய பொழுது அல்லாஹ்வுடைய பொருப்பிலே வருகிறோம்.

 தினமும் தொழுகிறோமா?

 ஐங்காலத் தொழுகையை ஜமாத்தோடு தொழுதால் 27 நன்மைகள்

 தினமும் ஐமாத்தோடு தொழுகிறோமா?

 குர்ஆனிலே ஓரு எழுத்தை ஓதினால் 10 நன்மை

தினமும் எத்தனை சூராக்களை ஓதுகிறோம்?

 தினமும் 12 ரக்அத் சுன்னத் தொழுதால் அல்லாஹ் சுவனத்தில் ஓரு வீட்டை கட்டுகிறான்

தினமும் தவறாமல் தொழுகிறோமா?

 ஓரு சுப்ஹானல்லாஹ் சொன்னால் அல்லாஹ் சுவனத்தில் ஓரு மரத்தை நடுகிறான்

ஓரு நாளைக்கு எத்தனை சுப்ஹானல்லாஹ் சொல்கிறோம்?

ஓரு தடவை அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹிவபரக்காத்துஹு என்று சொன்னால் 30 நன்மை

ஓரு நாளைக்கு எத்தனை நபர்களுக்கு ஸலாம் சொல்கிறோம்

 ஓரு நோயாளியை காலையில் போய் சந்தித்தால் மாலை வரை 70,000 மலக்குமார்கள் எமக்காக துஆச் செய்கிறார்கள்

 ஓரு நாளைக்கு எத்தனை நோயாளியை நாம் சந்திக்கிறோம்?

 தொழுகையை எதிர் பார்த்தநாம் பள்ளியில் அமர்ந்து இருக்கும் போது எமது பாவங்கள் மரக்கிளைகளின் இலைகள் உதிர்வது போல் பாவங்கள் எம்மைவிட்டு உதிர்கின்றன.

எத்தனை முறை நாம் தொழுகைக்காக பள்ளியில் காத்து இருந்திருப்போம்?

நன்மையை ஏவி தீமையை தடுத்தால் அல்லாஹ்விடத்திலே அதிகமான நன்மைகள் உள்ளன.

எத்தனை பேருக்கு நன்மை ஏவி இருப்போம் தீமையை தடுத்திருப்போம்?

 ஓவ்வொரு நாளும் கோடிக்கனக்கான நன்மைகளை பெற அல்லாஹ் எமக்கு அவகாசம் தந்துள்ளான்.ஓவ்வொரு நாட்களும் எம்மை விட்டு பிரிந்தால் எமது மண்ணறை எம்மை நோக்கி வருகிறது.

 என்ன இருக்கிறது அந்த மண்ணறை வாழ்க்கைக்கு எம்மிடத்தில் சிந்தித்துப் பார்ப்போமா?

 எத்தனை ஜனாஸாக்கள் எம்மை கடந்து செல்கின்றன.

அது எம்மை கடக்கும் போது அந்த ஜனாஸாவாக நாம் இருந்தால் அந்த மண்ணறைக்கு எம்மிடத்தில் என்ன உள்ளது நாம் சிந்தித்து பார்த்தோமா?

 நாம் மரணித்தபின் மண்ணறை வாழ்க்கை உண்டு நரக வாழ்க்கை உண்டு சொர்க்க வாழ்க்கை உண்டு எல்லாம் நன்றாக அறிந்து வைத்துள்ளோம்.

அதற்குண்டான முயற்ச்சி மட்டும் எம்மிடத்தில் இல்லை ஏன்?

 சினிமா மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை.

ஆனால் பார்க்கிறோம் நரகத்தின் வேதனையை தேடியா?

 சினிமா பாட்டுக்கள் மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை.

 ஆனால் கேட்கிறோம். நரகத்தின் வேதனையை தேடியா?

 சீரீயல்கள் மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை.

ஆனால் குடும்பத்தோடு பார்க்கிறோம்.ஏன் குடும்பமே நரக வேதனையை உணரவா?

 ஆயிரம் ஜனாஸாக்கள் கண்முன்னே கடந்து சென்றாலும் எமது வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் வரவில்லை என்றால்

 எமது மண்ணறைக்கு யார் பதில் சொல்ல முடியும்?

 அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் கப்ரிலியே நடக்ககூடிய வேதனையை மட்டும் நான் உங்களுக்கு எடுத்துச் சொன்னால் உங்களில் யாரும் எந்த ஜனாஸாவையும் அடக்க கப்ருஸ்தான் பக்கமே வரமாட்டீர்கள் என்று.

 ஓவ்வொரு வினாடியும் நம்மை விட்டு பிரிந்து சென்றால் திரும்ப வரப்போவதில்லை.இன்னும் எத்தனை நிமிடங்கள் அல்லாஹ் எம்மை இந்த உலகத்தில் வைத்திருப்பான் என்பதற்க்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை.

 தினமும் உறங்கும்போது 10 நிமிடங்கள் எமது கப்ரை நாம் சிந்தித்துப் பார்த்தால் ஓரு நொடிப்பொழுதைக்கூட எம்மால் பாழாக்க முடியது.

ஆனால் நாம் கப்ரை சிந்தித்து பார்ப்பதில்லை காரணம் உயிரோடு படுத்து இருப்பது கட்டில் மெத்தையில்
நிரந்தரமாக படுக்க போகும் இடத்தை தினமும் எண்ணிப்பார்த்தால்
எமது ஈமானும் தக்வாவும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ் புக்கிலும் அமர்ந்து கொண்டு 24 மணி நேரமும் உலக காரியங்களையும் மக்கள் குறைகளையும் ஆராய்ச்சி செய்யக்கூடிய நாம்.

 ஓரு வினாடி அடுத்து நாம் சந்திக்கப்போகும் எமது மண்ணறையை ஆராய்ச்சி செய்தால் தெளிவான விடையும் கிடைக்கும்

அதற்கான நன்மைகளையும் விரைந்து செயல்படுத்தலாம்என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 நாம் வேண்டுமென்றால் மண்ணறையை மறந்து வாழலாம் அது ஓரு நாள் எம்மை நினைக்கத்தான் போகிறது.

 நாம் வேண்டுமென்றால் மண்ணறை வாழ்க்கையை விரும்பாமல் இருக்கலாம் ஆனால் அது ஓரு நாள் எம்மை விரும்பத்தான் போகிறது.

 ஒவ்வொரு ஜனாஸாவும் எம்மை கடந்து செல்லும் போது எமக்கு அல்லாஹ்வுடைய அச்சம் அதிகரிக்க வேண்டும்.
கப்ர் வாழ்க்கை கண்ணில் தோன்ற வேண்டும்.நரகத்தின் வேதனைகள் எம்மை அமல்களால் பாதுகாக்கவேண்டும்.

இன்று ஜனாஸாக்களை பார்க்ககூடிய நாம் அடுத்த வினாடி ஜனாஸாகளாக மாறலாம் என்ன வைத்துள்ளோம் எமது மண்ணறைக்கு எனஎமது உள்ளத்தை கேட்போம் தெளிவான விடை கிடைக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

இன்ஷா அல்லாஹ்!!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.