இரும்பு வியாபாரி அக்பர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மர்ம மரணம்சென்னை மண்ணடியில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த இரும்பு வியாபாரி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மண்ணடி மல்லீஸ்வரன் கோவில் தெருவில் அக்பர் என்பவர், இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் கிருஷ்ணன்கோவில் தெரிவில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்றிரவு வீட்டிற்கு தூங்க வந்த அவர், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த வந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அக்பர் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த  சிசிடிவி கேமரா இயங்கவில்லை என தெரிகிறது. இந்த கொலை தொடர்பாக அக்பர் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.