துபாயில் இறந்த வெளிநாட்டினர் உடல்களை திருப்பி அனுப்புவதில் இனி புதிய நடைமுறைகள்துபாயில் இறந்த வெளிநாட்டினரின் பதப்படுத்தப்பட்ட உடல்களை இனி துபை விமான நிலையம் வரை கொண்டு செல்ல மட்டுமே துபை முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸூகள் அனுமதிக்கப்படும் என்ற புதிய உத்தரவு வெளிநாட்டினருக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

அமீரகத்தில் இறந்தவர்களின் உடல்களை மாநகராட்சிகளுக்கு சொந்தமான ஆம்புலன்ஸூகளில் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். தனியார் மற்றும் மருத்துவமனை ஆம்புலன்ஸூகள் பயன்படுத்த அனுமதியில்லை.

துபாய் முனிசிபாலிட்டி நிர்வாகத்தின் கீழுள்ள அல் கிஸஸ் கபரஸ்தான் சேவை மைய ஆம்புலன்ஸூகள் இனி துபாய் விமான நிலையத்தை தவிர அமீரகத்தின் வேறு எந்த விமான நிலையங்களுக்கு பதப்படுத்தப்பட்ட உடல்களை கொண்டு செல்லும் சேவை வழங்காது என அறிவித்துள்ளது துபாய் உட்பட ஷார்ஜா, உம்மல் குவைன், புஜைரா போன்ற அமீரகவாசிகளையே கடுமையாக பாதித்துள்ளது. மேற்சொன்ன அமீரக பகுதிகள் அனைத்தும் துபையின் அல்முஹைசினாவில் செயல்படும் சுகாதார ஆணய மையத்தையே (மார்ச்சுவரி) சார்ந்துள்ளன.

கடந்த ஒரு வருடமாகவே துபாய் முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸ் சேவைகள் பிற அமீரகங்களுக்கு உடல்களை எடுத்துச் செல்வதை நிறுத்திவிட்டாலும் அண்டை அமீரகமான ஷார்ஜா முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸூகள் துபாய் போலீஸரின் சிறப்பு அனுமதியுடன் பிற விமான நிலையங்களுக்கு உடல்களை எடுத்துச் சென்றன, அந்த அனுமதியும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல தாயகத்தில் அருகாமையிலுள்ள விமான நிலையங்கள் பலவற்றிற்கு துபாய் விமான நிலையத்திலிருந்து விமான சேவையே இல்லை, அப்படியே விமான சேவை இருந்தாலும் (உடலை சுமந்து செல்ல) கார்கோ டிக்கெட் அல்லது கார்கோ உடன் பயணிப்பவருக்கான டிக்கெட் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் பட்ஜெட் விமான டிக்கெட்டை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்பதையெல்லாம் கடந்து டிக்கெட் கிடைத்தாலும் அது இணைப்பு விமானமாக (Connecting Flight) இருந்தால் உடலுடன் மாற்று விமானத்திற்காக பல மணிநேரம் காத்திருக்க நேரிடும் மேலும் விமான நிலையத்திலிருந்து சொந்த ஊர்கள் பலருக்கு சுமார் 12 மணிநேரம் வரை சாலை பயணத்தில் அடையக்கூடிய தூரத்தில் உள்ளவை. குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் பல இந்தியர்கள் (பொதுவாக வெளிநாட்டினர்) இதனால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் இந்த புதிய உத்தரவை திரும்பப் பெற சமூக சேவகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அபுதாபி, அல் அய்ன் மற்றும் ராஸ் அல் கைமாவில் இத்தகைய விதிமுறைகள் இல்லை மேலும் துபை ஆம்புலன்ஸ் சேவைகளுக்காக 220 திர்ஹம் கட்டணம் விதிக்கப்படும் நிலையில் ஷார்ஜா ஆம்புலன்ஸூகள் துபாய் விதித்துள்ளது போன்ற கட்டுப்பாடுகள் ஏதுமின்றி இலவச சேவைகளே வழங்குகின்றன.

இறந்தவர்கள் விஷயத்தில் துபை மாநகராட்சி நிர்வாகம் இலகுவான போக்கை கடைபிடித்து உதவ வேண்டும் என இந்திய அரசு விருதுபெற்ற சமூக சேவகரும் தொழிலதிபருமான அஷ்ரப் தாமரசேரி, சமூக சேவகர் சி.பி.மேத்யூ போன்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விஷயத்தில் இந்தியர்களுக்காக, இந்தியர்களின் அந்நிய செலாவணி வருவாயில் நடக்கும் மத்திய அரசும், இந்திய தூதரகமும் துபை மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி நல்ல முடிவை பெற்றுத்தர வேண்டும், செய்வார்களா? அல்லது விமான நிலையங்களில் சுங்கவரி வசூலிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.