மத கடமைகளை பாதுகாப்பாக நிறைவேற்ற இமாம்ஸ் கவுன்சில் தமிழக அரசுக்கு கோரிக்கை
குர்பானியை நிறைவேற்றுவதற்கு ஜனநாயக அடிப்படையில் சுதந்திரமாக மதக்கடமைகளை நிறைவேற்ற தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுக்கவேண்டும்
இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழுவில் தீர்மானம்

 ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு கூட்டம் 04-08-2016 அன்று மதுரையில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ அவர்களின் தலைமையில் நடைபெற்றது மாநில பொதுச்செயலாளர் மௌலவி இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் இதில் சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச்செயலாளர் மௌலவி ஷாகுல் ஹமீது பாகவி அவர்கள் கலந்துகொண்டார்கள் இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

 1. பக்ரீத் பண்டிகைக்கு மிருகங்களுக்கு பதிலாக முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை பலிகொடுக்க வேண்டும் என்று திமிராக பேசிய இந்தூர் சட்டமன்ற உறுப்பினர் உஷா தாக்கூரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது மத்திய அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.முஸ்லிம்களின் மதக்கடமையான குர்பானியை நிறைவேற்றுவதற்கு இடையூறாக பிராணிகளை கொண்டு செல்லும்போது வழிமறித்தல் கைப்பற்றி செல்லுதல் போன்ற காரியங்களில் ஈடுபடும் குண்டர்களை தடுத்து ஜனநாயக அடிப்படையில் சுதந்திரமாக மதக்கடமைகளை நிறைவேற்ற தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.2. கேரளாவின் காங்கிரசின் தலைவர் பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் பள்ளிவாசலில் பாங்கு சொல்வதை நாய் குறைப்பதோடு ஒப்பிட்டு பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது முஸ்லிம்களின் மத உணர்வை கொச்சப்படுத்தி பேசிய பாலகிருஷ்ணன் பிள்ளையை கேரள அரசும் மத்திய அரசும் உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. உலமாக்களின் ஓய்வூதியத்தை 1௦௦௦ ரூபாயிலிருந்து 15௦௦ ரூபாயாக உயர்த்திய தமிழக அரசை இமாம்ஸ் கவுன்சில் பாராட்டுகின்றது.

4. ஆலிம்களின் குழந்தைகளுக்கு கல்விஉதவிதொகை வருகின்ற செப்டம்பர் 1 முதல் 15 க்குள் விண்ணப்ப படிவங்களை ஆய்வு செய்து மாவட்ட வாரியாக கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கபட்டது.

5. ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துகளை மீட்டுவதற்காக செப்டம்பர் மாதத்தில் சென்னையில் வைத்து கவன ஈர்ப்பு தர்ணா நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது .
இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் மாநில செயலாளர் மௌலவி அர்ஷத் அஹமது அல்தாபி அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி
மாநில செய்தி தொடர்பாளர்
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் நாடு
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.