தோழுகையை கெடுக்கும் சைத்தான்.. அல் ஹதீஸ்“தொழுகைக்காக (பாங்கு கூறி) அழைக்கப்பட்டுவிட்டால், பாங்கோசையை செவியுறாதிருக்குமளவிற்கு பின்துவாரத்தின் வழியாக பெரும் சப்தத்துடன் காற்றைவிட்டவனாக ஷைத்தான் பின்னால் செல்லுகிறான். பாங்கு கூறி முடிக்கப்பட்டுவிட்டால் (மீண்டும்) முன்னால் வருகிறான். தொழுகைக்கு ‘இகாமத்து‘ கூறப்பட்டு விட்டால் பின்னால் செல்லுகிறான். இகாமத்து கூறப்பட்டு முடிந்ததும் (மீண்டும் முன்னால்) வந்து, மனிதரின் மனத்திற்கும் அவருக்குமிடையில் (அவர் மனதில் பல எண்ணங்களை உண்டாக்கி) நடந்து முடிந்துவிட்ட இன்னவைகளை நினைத்துபார்: இன்னவைகளை நினைத்துபார் எனவும் அதற்கு முன்பு அவர் நினைத்து பார்க்காதவற்றையெல்லாம் நினைவு கூறுமாறு கூறுகிறான் இறுதியாக அம்மனிதர் எத்தனை (ரக்அத்துகள்) தொழுதார் என தெரியாதவாறு ஆகிவிடுகிறார்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
முஸ்லிம் ஹதீஸ் எண் : 196
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.