நிதி ஒதுக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் முத்துப்பேட்டை ஒன்றிய கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் ஆவேசம்முத்துப்பேட்டை ஒன்றிய குழு கூட்டம் தலைவர் நடராஜன் (அதிமுக) தலைமையில் நடைபெற்றது. ஆணையர்கள் பாலசுப்ரமணியன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: ராமமூர்த்தி (திமுக): இந்த கூட்டம் கடைசி கூட்டம் போல் தெரிகிறது. இதிலாவது நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். த.கீழக்காடு பகுதியில் 15 தினங்களாக குடிநீர் வரவில்லை. ஓ.ஏ.பி. வங்கியில் முதியோருக்கு உதவித்தொகை வழங்குவதில் குளறுபடி உள்ளது. பயனாளிகளிடம் அதிகாரிகள் நேரடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிப்பறை கட்ட மானியம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதைக் கட்டி கொடுக்க கூடுதலாக ரூ. 4 ஆயிரம் கேட்கின்றனர்.

காமராஜ் (காங்.): ஒருவருடமாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தில்லைவிளாகம் கோவிலடியில் 15 தினங்களாக குடிநீர் கிடைக்கவில்லை. மரைக்கா கோரையாறு மற்றும் பாசன வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். ஜெயக்குமார் (அதிமுக): கடைசி கூட்டமாக இருப்பதால் இந்த கூட்டத்தில் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும்.

புனிதா (சுயே): தில்லைவிளாகம் ஊராட்சி தெற்குகாடு அரமங்காடு இணைப்பு பைப்லைன் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பணியை துவங்க வேண்டும். தெட்சிணாமூர்த்தி (து.தலைவர்): கர்நாடக அணைகளில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு தர மறுத்து வருகின்றனர். மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முறையிட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வளவனாறு தூர்வார ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் பணி துவங்கவில்லை. தற்பொழுது வறட்சி நிலவுவதால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்களுக்கு பணிகள் வழங்க வேண்டும்.

தலைவர்:  அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாலசுப்ரமணியன் (ஆணையர்): நிதி ஒதுக்கீடு பற்றி பேசினீர்கள். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்றார். இதைக்கேட்டதும், திமுக கவுன்சிலர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கவுன்சிலர் காமராஜ் ஆகியோர் ஆணையரிடம் கடும் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டனர். நிதி ஒதுக்கீடு செய்தால்தான் இங்கிருந்து கிளம்புவோம், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்.

அடுத்த தேர்தல் அறிவிக்கும் வரை இங்கேயே குடியிருப்போம் என்று கூறினர். நீண்ட நேரத்திற்கு பிறகு  ஆணையர் பாலசுப்ரமணியன், இதுகுறித்து கலெக்டரை சந்தித்து பேசி நல்ல முடிவை தெரிவிக்கிறேன் என்றார். இன்று நல்ல பதில் தெரிவிக்காவிட்டால் ஒன்றிய குழு அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று கூறிவிட்டு கவுன்சிலர்கள் வெளியேறினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.