ஷார்ஜாவில் பிச்சைக்கார ஏமாற்றுப் பேர்வழி கைது !பொதுவாக முஸ்லீம்கள் இளகிய மனம் படைத்தவர்கள், இல்லாதோருக்கும் இயலாதோருக்கும் உதவுவதில் முன்னிலை வகிப்பவர்கள். இருந்தாலும் அமீரகத்தில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது, அமீரகத்தை தாயகமாக கொண்டோர் யாரும் பிச்சை எடுப்பதில்லை அவர்களுக்கான உதவிகளை அரசே செய்யும்.

இந்நிலையில், ஒரு சில நாடுகளிலிருந்து பிச்சை எடுப்பதற்கென்றே விசிட் விசாவில் வந்து கள்ளத்தனமாக பிச்சை எடுப்பதை வெகுசிலர் தொழிலாகவே செய்து வருகின்றனர். இவர்களின் வருகை புனித ரமலான் மாதத்தில் மிக அதிக அளவில் இருக்கும்.

இன்று ஷார்ஜா போலீஸாரிடம் பிடிபட்ட ஒருவன் தனது ஒரு கையை இழந்தவன் போல் சட்டைக்கு மேல் சட்டை அணிந்து மக்களை ஏமாற்றி பிச்சை எடுத்து வந்த நிலையில் பிடிபட்டுள்ளான், அது மட்டுமல்ல அவனுடைய 4 மணிநேர கலெக்ஷன் 800 திர்ஹமும் பிடிபட்டுள்ளது. (உழைப்பவனின் ஒரு மாத சம்பளமே இவ்வளவு தானே கடைசியாக தேறும்)

"எல்லோரையும் சந்தேகம் கொள்! பிச்சைக்காரர்கள் உட்பட" என்ற சொல் வட்டத்துக்குள் தேவையுடைய எளியோர்களும் வந்துவிடுவார்களே! இவனைப் போன்றவர்களால் உண்மையாகவே உதவியை எதிர்பார்க்கும் மக்கள் பாதிக்கப்படுவது என்னவோ நிச்சயம்.

இவனுடைய போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிந்து ஷார்ஜா போலீஸ் எச்சரித்துள்ளது. ஹூம்! கொடுத்து வைத்த பிச்சக்காரன் போல!

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.