உயிருடன் இருக்கும் போதே தாய் இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரிப்பு: பிள்ளைகள் மீது புகார்
தான் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரித்து பல லட்சம் மோசடி செய்த பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மூதாட்டி ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் புகார்  அளித்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் வசிக்கும் அப்துல்ஜப்பாரின் மனைவி கமர்நிஷா 78 வயதான மூதாட்டி ஆவார். இவர் மலேசியாவில் இருந்த போது இவரது 7 பிள்ளைகளில் 5 பேர் கூட்டுச்சதி செய்து போலி ஆவணம் தயாரித்து தனது கணவரின் பெயரில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை, பெயர்மாற்ற மோசடி
செய்துள்ளதாகவும் ராமநாதபுரம் ஏ.எஸ்.பி. சர்வேஷ்ராஜிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.