முத்துப்பேட்டையில் பென்சன் கிடைக்காமல் கஷ்டப்படும் நேதாஜியின் நண்பர் தியாகி முஹம்மது தாவூது மணைவி!



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை  பேட்டை சாலையில் வசித்து வந்தவர் சுதந்திர போராட்ட தியாகி டாக்டர் கே.எஸ்.முகமது தாவுது(99). ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த ஐஎன்ஏ படையில் தீவிரமாக பணியாற்றியவர். ஒருமுறை பர்மாவில் நடந்த முகாமுக்கு மாறுவேடத்தில் வந்த நேதாஜியை உள்ளே விட தியாகி முகமது தாவுது மறுத்துள்ளார். பின்னர் வேடத்தை கலைத்த பிறகு தான் நேதாஜியை முகாமிற்குள் அனுமதித்துள்ளார். அன்று முதல் நேதாஜிக்கு நெருங்கிய நண்பராக விளங்கினார்.

தமிழக அரசின் தியாகிகள் பென்ஷன் வாங்கி வந்த முகமது தாவுது கடந்த 2015ம் ஆண்டு இறந்தார். அதன் பின்னர் 17 மாதங்கள் ஆகியும் அவரது மனைவி சபுரா அம்மாளுக்கு பென்ஷன் கிடைக்கவில்லை. பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இது குறித்து சபுரா அம்மாள் கூறுகையில், நாட்டிற்காக பாடுபட்ட எனது கணவரின் தியாகத்தை நினைத்து பார்த்து கூட எனக்கு உதவி தொகையை வழங்க முன்வராத அதிகாரிகளை கண்டு வேதனைப்படுகிறேன் எனக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகையை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

Thanks To: Dinakaran
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.