வரலாறு படைத்த தலித் முஸ்லிம் போராட்டம் .. குஜராத் முதல்வர் பதவி விலகல்...! ஓர் அலசல்மோடியின் வித்தை எனக்கு தெரியவில்லை... குஜராத் முதல்வர் பதவி விலகல்...!

வரலாறு படைத்த தலித் முஸ்லிம் போராட்டம் - பேரணி!
குஜராத் மாநிலத்தில் செத்த மாடுகளின் தோலை வைத்திருந்ததற்காக நான்கு தலித் இளைஞர்களை காவி கும்பல் கட்டி வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட வன்முறை கலவரமாக மாறியது குஜராத்.

நாடெங்கிலும் காவி தீவிரவாதிகளுக்கு எதிராக கண்டண குரல்கள் எழுந்தன. தலித் சகோதரர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தவ்ஹீத் ஜமாத், SDPI உட்பட இஸ்லாமிய இயக்கங்கள் தமிழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.

இந்நிலையில் குஜராத்தில் தலித் இனத்தவருக்கு ஆதரவாக களமிறங்கிய இஸ்லாமியர்கள் குஜராத் முழுவதும் தலித் - இஸ்லாமியர் போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தின. ஆளும் வர்க்கமே ஆட்டம் காணும் வகையில் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் போராட்டம் வெடித்தன.

இதன் விளைவாக தற்போது குஜராத் முதல்வர் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார்.

மோடி மஸ்தான் வேலை தனக்கு தெரியவில்லை என்பதையே அவரின் ராஜினாமா வெளிபடுத்துகிறது. குஜராத்தை தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி செய்த மோடியின் சூயரூபம் வெளிவந்துள்ளது. 2002 குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் 3000 க்கும் மேற்பட்டோரை காவி தீவிரவாதிகளை கொண்டு கொலை செய்தது மோடி தலைமையிலான குஜராத் அரசு. மக்களை தனது RSS தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வைத்துதான் பதினைந்து ஆண்டுகாலம் ஆட்சியில் அமர்ந்திருந்தார் மோடி என்பது நிருபணம் ஆகியுள்ளது.

பொருத்து பொருத்து போன குஜராத் மக்களின் கோபம் வெகுண்டெலுந்ததே தற்போதைய போராட்டக்களம்.

நாடெங்கிலும் மோடி அரசுக்கு எதிரான கண்டண குரல்கள் எழ தனது சொந்த மாநிலத்தில் ஆட்சியை நடத்த இயலாத அளவிற்கு முதல்வரே ராஜினாமா செய்யும் அளவிற்கு போராட்ட களம் கண்ட தலித்- முஸ்லிம்களின் வலிமைமிக்க பேரணியால் மோடிக்கு அவமானமே!

இத்தோடு நின்று விட போவதில்லை மிஸ்டர் மோடி. உனது மாட்டு அரசியலின் விளைவாக நீயும் பதவி விலகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதை எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறோம்.

- தமிழ்நாடு முஸ்லிம் மீடியா
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.