முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து எஸ்.பி ஆய்வுமுத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து எஸ்பி ஆய்வு நடத்தினார். திருவாரூர் மாவட்ட புதிய எஸ்பி மயில்வாகனம் முத்துப்பேட்டைக்கு வந்தார். பயணிகள் ஆய்வு மாளிகையில் அவர் முத்துப்பேட்டை டி.எஸ்.பி அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோரிடம் விரைவில் நடைபெற இருக்கும் விநாயகர் சிலை ஊர்வலம் பற்றியும், ஊர்வலம் செல்லும் பாதைகள் குறித்த வரைபடத்தையும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நாளை (9ம் தேதி) நடைபெற இருகின்ற பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பிறந்தநாள் விழா குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கருப்பு முருகானந்தம் பிறந்தநாள் விழா நடைபெறும் குமரன் பஜாரில் உள்ள  திருமண மண்டபம் இருக்கும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.