காஷ்மீர் - குருதி வழியும் தேசம்! ஸ்பெஷல் ரிப்போர்ட் :சர்வதேச அளவில் காஷ்மீர் மாநிலம் ஒரு பிரச்சினைக்குரிய மாநிலம் ஆகும் .காஷ்மீர் குறித்த செய்திகள் தொடர்ந்து இந்திய ஊடகங்கள் மறைக்கின்ற வேளையில்பல தரப்பட்ட சித்திரவதைகளுக்கு காஷ்மீரிகள் கடந்த 70 வருடமாக ஆளாகும் தருணத்தில் , ,
இந்திய ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி புர்ஹான் வானியின் இறப்பு தற்போது கவனிக்கப்படுகின்ற செய்தி ஆனது .
அவரது இறுதி ஊர்வலத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வுகளை பட்டவர்த்தனமாக துணிச்சலாக வெளிப்படுத்தினார்கள்.காஷ்மீர் மக்களின் இத்தகைய விடுதலை உணர்வே ராணுவத்திற்கும் , பொது மக்களுக்கும் இடையே மோதல் வெடிக்க காரணமாகி இருக்கின்றது.
இது இந்தியாவின் அரசியல் பிரச்சினைகளா ? அல்லது அடக்கு முறைக்கு உள்ளான காஷ்மீர் மக்களின் உணர்வுப்பிரச்சினைகளா ? என்பதை விரிவாக்கப் பார்ப்போம் ..

புர்ஹான் வானி படுகொலையும்
தொடர் சம்பவங்களும் ரிப்போர்ட் !

காஷ்மீரி பூம்தூர் கிராம பகுதி ஒரு மிகப்பெரிய புரட்சி ஏற்பட காரணமாக இருந்தது .22 வயது புர்ஹான் வானி வீரமரணம் அடைந்த இடம் என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மிகவும் பிரபலம் ஆனது . மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து எங்கே புர்ஹான் வீர மரணம் அடைந்த இடம் என விசாரிக்கத் தொடங்கும் தருணம் அது
வருகை தந்த மக்கள் எங்களை ஏளனமாக பார்த்தார்கள். இந்த மூவர்களையும் பாதுகாக்க உங்களால் ஒரு கல் கூட எறிய முடியவில்லையா என்ற அவர்களின் எண்ணம் எங்களுக்கு புரிந்தது. எங்கள் கிராம மக்களுக்கு புர்ஹான் வானி வந்து இருப்பது தெரியாது. துப்பாக்கி சண்டை நடந்த பிறகு தான் தெரிந்தது என்றார் அந்த கிராமத்தின் படித்த யுவன் அஹ்மத் 24 வயது பொறியியல் பட்டதாரி .
கொல்லப்பட்ட மூன்று நபர்களும் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சர்தாஜ் அவர்களின்உ றவினர் வீட்டில் வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமை பகல் பொழுதில் தங்கி இருந்துள்ளனர் .
ஜூலை 8 ஆகி திகதி வெள்ளிக்கிழமை மதியம் ராணுவம் பெரிய அளவில் குவியத் தொடங்கி இருக்கின்றார்கள் . முதலமைச்சர் மெஹ்பூபா வருவதால் பாதுகாப்பிற்காக ராணுவம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர் .
மதியம் 4 மணி வேளையில் ராணுவ வீரர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். மூவரும் ஒருவர் பின் ஒருவராகப் பதுங்க திட்டமிட்டு இருக்கின்றார்கள் .சரியாக 5.30 மணி அளவில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சர்தாஜ் வெளியே வரும்போது சுட்டு கொல்லப்பட்டு இருக்கின்றார் . சூழ்ச்சி வலை அறிந்த புர்ஹான் வானி மற்றும் மற்றவரும் தப்பிக்கும்போது இருவரும் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் .
புர்ஹான் வானி தனது 15 வயதில் ஆயதம் ஏந்தியவர் . மற்ற போராளிகளைப் போல அல்லாமல் முகத்தை மூடாமல் இருந்தார். .
தன் கொள்கைகளை சமூக வலைத்தளமான முக நூலில் தனது வீடியோக்களை பதிந்து காஷ்மீர் வாலிபர்களுக்கு இடையே கதா நாயகராக போற்றப்பட்டுள்ளார் .
புர்ஹான்வானி கொல்லப்பட்டது காட்டு தீயை போல் காஷ்மீர் முழுக்க செய்தி பரவி இருக்கின்றது. பொதுமக்கள் வெகுண்டேழுந்து ராணுவம் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றார்கள்.இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் முழுக்க போர்க்களம் ஆனது. ஆங்காங்கே வன்முறை வெடித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காஷ்மீர் மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படமால் போராடி வந்தனர், சனிக்கிழமை காலை வானிக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. புர்ஹான் வானி அவர்களின் இறுதி தொழுகையில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சம் பேர் ஆகும் . இறுதி தொழுகையில் கலந்து கொள்ளாதவர்கள் அடுத்து அடுத்து 50 முறை கொல்லப்பட்ட புர்ஹான் முஸப்பருக்காக தொழுகை நடத்தி உள்ளார்கள் .அன்றய தினம் மட்டும் ராணுவத்தால் 15 பேர்கள் கொல்லப்பட்டனர், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காவல்நிலையம், ராணுவ சோதனைச்சாவடிகள் கொளுத்தப்பட்டது. மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டது.

அல்-ஜஸீரா பத்திரிக்கையாளர்
விளக்கும் காஷ்மீர் மக்களின் வலிகள்:

அல்-ஜஸீரா பத்திரிக்கையாளர் ஷாஹித் ரபீக் தான் கண்ட காட்சிகளை தெளிவாக விளக்குகிறார். வீதி எங்கும் துப்பாக்கிச்சூட்டின் சப்தங்களும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் சைரன்களும் தொடர்ந்துக் கேட்டுக்கொண்டே இருந்தது. 5 நாட்களாக பத்திரிக்கையாளர்கள் கூட யாரும் செல்லவில்லை, காரணம் ராணுவம் மீது பயம் என்பதை விட மக்கள் மீது என்று கூறலாம் . ஏனெனில் மீடியாக்கள் உண்மைச் செய்திகளை சேகரித்து விட்டு உண்மைக்கு புறம்பானவற்றை பரப்புவார்கள் என்ற கோபத்தில் காஷ்மீரிகள் உள்ளதால் யாரும் செல்லவில்லை.
ஷாஹித் ரபீக் தனது சக தோழருடன் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் 22 வயது புர்ஹான் வாணி ஷயித் ஆக்கப்பட்ட பூம்தூர் கிராம பகுதிக்கு சென்றோம்.
மருத்துவமனையில் சிகிசிச்சை பெற்று வந்த வயது முதிர்ந்த மூதாட்டி சாரா பேகம் ,வயது 79, அவரிடம் அல் ஜஸீரா ஊடகவியலாளர் ஷாஹித் ரபீக் அவர்கள் உரையாடலை துவங்கியதில் இருந்து கிடைத்த தகவல்கள் கண்களை கசிய வைத்தன .
சாரா மூதாட்டி வீட்டில் இருக்கும் இருக்கும் பொழுது போலீஸ்காரர்கள் மூதாட்டியின் சிறு பேரன் போராட்டத்தில் கலந்துக்கொண்டதாக கூறி தேட ஆரம்பித்தார்கள் . வயதான உடல்நலம் சரியில்லாத மூதாட்டி என்று கூட பாராமல் அவர்களை கீழே தள்ளி கடுமையாக அடித்து இருக்கின்றார்கள் . அவர்களின் ஒருவன் மூத்த பெண்மணியின் மார்பை பிடித்து இழுத்த்தான் என்று கூறும் பொழுதே காஷ்மீர் ராணுவத்தின் அக்கிரமங்களின் அளவுகோல் உலகிற்கு எளிதாக புரிந்து விடும் .
வீட்டில் உள்ள அனைவரையும் கடுமையாக தாக்கி , பெண்களை சித்திரவதை செய்துள்ளனர் . என் தங்கையை என் கண் முன்னே நிர்வாணம் படுத்தி ரசித்தனர் என்று மூதாட்டியின் பேரன் 15 வயது சிறுவன் உமர் கூறுகையில் உள்ளம்
பதறுகின்றது .
அவன் தங்கையின் நிர்வாண கொடுமையினால் அவனால் மூன்று நாட்கள் தூங்காமல் தவித்து இருக்கின்றான் .
உமரின் சிந்தனை முழுக்க அந்த போலிஸ்காரனை கொலை செய்து
பழி தீர்க்க வேண்டும் என்ற தூண்டுதல் ஆழமாக பதிய காஷ்மீர் காவல்துறை காரணமாகி இருக்கின்றது .இந்த சம்பவத்திற்கு பிறகு வாழ்நாளில் முதன் முறையாக போராட்டத்தில் உமர் கலந்து கொண்டான் . காஷ்மீரில் ஆயிரத்திற்கும் அதிகமான உமர் உருவாக்குவதற்கு காரணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன .

காஷ்மீர் மருத்துவமனையில் 46 வயது பெண்மணி மசூதா, நான்கு மகள்களின் தாயார் ஆவர் . கடைசி மகளுக்கு 7 வயது ஆகுகிறது.
அவர்கள் தெருவில் நடந்து சென்ற போது போலீஸ் மற்றும் CRPF வீரர்கள் தாக்க முயற்சி செய்த வேலை பயந்து ஓடியிருக்கின்றார்கள் .
அந்த தருணம் துப்பாகியால் மசூதாவை காலில் சுட்டு இருக்கின்றார்கள் தோட்டாக்கள் பாய்ந்த கால் வலியில் அவர் கீழே விழுந்துள்ளார் .
அந்த நிலையிலும் அதை பெண்மணியை அடித்துள்ளார்கள் . மசூதாவின் கணவன் மற்றும் இரண்டு மகள்களை கடுமையாக தாக்கி உள்ளார்கள் .
ரத்தம் வழிந்துகொண்டே இருந்தது வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்துள்ள அந்த பெண்மணியை விடாமல் தடியை வைத்து அடித்துக்கொண்டே இருக்கையில் அவரை காக்க வந்த கணவன் மற்றும்
மகள்கள் மீது தாக்குதல் நடந்தேறியது . மயங்கிய மசூதா கண் விழித்து பார்க்கும்போது மருத்துவமனையில் இருந்துள்ளார் .
வயதான ஒரு முதியவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்லும் வழியில் ராணுவம் வழி மறித்து,
" நேற்று நீ தானே எங்கள் மீது கல் எறிந்தாய் என வாக்குவாதம் செய்தனர். அதற்கு அந்த முதியவர் இல்லை இல்லை, உடல்நலம் சரியில்லாமல் என் மனைவி மிகவும் சிரமப்படுகிறாள். அவளை மருத்துவமனை கொண்டு செல்கிறேன் என கூறினார்.
இன்னொரு படுக்கையில் , முஹம்மது சயீம் 17 வயது , போலீசார் நடத்திய துப்பாகிச் சூட்டில் 3 தோட்டாக்கள் இடது காலில் பாய்ந்து வலியில் தாங்க முடியவில்லை என கதறி கொண்டு இருந்தார்.
மருத்துவமனைக்கு வெளியே இலவச மருத்துவ முகாமில் சேவை செய்து வந்த ஜுபைர் என்பவரை சந்தித்து உரையாடும் போது தன் சட்டையை உயர்த்தி காட்டினார். உடல் முழுவதும் சிறு சிறு ஓட்டைகளாக இருந்ததுபுர்ஹானின் இறுதி ஊர்வலம் நடத்தினோம்
அதற்கு பெல்லட் குண்டுகளால் ராணுவம் சுட்டது என்றார் . . நாங்கள் சட்ட திருத்தத்தை கேட்கவில்லை .புலன் விசாரணை நடத்த வலியுறுத்த வில்லை .நாங்கள் கேட்பது காஷ்மீரின் சுதந்திரம் என்பது ஒவ்வொரு காஷ்மீரிகள் குறித்தும் சிந்திக்க வைக்கின்றது .

காஷ்மீர் மாணவியின்
கண்களை பறித்த இந்திய ராணுவம் :

கிரேட்டர் காஷ்மீர் பத்திரிக்கையாளர்கள் அளித்த செய்தியின் படி ,9ம் வகுப்பு படிக்கும் காஷ்மீரை சேர்ந்த 14 வயது மாணவி இன்ஷா மாலிக், ஜூலை மாதம் 12 ஆம் நாள் அன்று அவரது வீட்டு வெளியே இந்திய ராணுவம் நடத்திய பெல்லட் குண்டு தாக்குதலில் ஜன்னல் வழியே குண்டுகள் பாய்ந்து உள்ளது .இதனால் முகம் சிதைந்து ரத்தம் கொட்டிய நிலையில் துடிதுடித்து அலறிய இன்ஷா மாலிக் சுயநினைவு இழந்துள்ளார்
மீட்கப்பட்ட இன்ஷா மாலிக் SMHS மருத்துவமனை அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். முகம் முழுக்க பெல்லட் குண்டு பாய்ந்து உள்ளதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு கோரமான சம்பவத்தை கண்டது இல்லை என தகவல் தெரிவித்தனர்.
இன்ஷாவின் வலது கண் வெளியே வந்துவிட்டது. இடது கண் முற்றிலும் செயல் இழந்து சிகிச்சை பயனளிக்காத கட்டத்தை அடைந்து இருக்கின்றார் . நிறைய பெல்லட் குண்டுகள் எடுக்க முடியாத அளவுக்கு ஆழமாக பதிந்துவிட்டது. அவரது கழுத்து பகுதியில் பலமாக தாக்கி இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என மருத்துவர்கள் வேதனையாக செய்தி அளித்தனர் .
பெல்லட் குண்டுகள் அவரது முகத்தில் எண்ணற்ற சிறு துளைகளை ஏற்படுத்தியுள்ளது, முகத்தில் ஏராளமான தையல் போட்டு அலங்கோலாமான நிலையில் அவர் முகம் உள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். இந்த நிலையில் இன்ஷா மாலிக்கின் மருத்துவமனையில் 14 வயது சிறுமியின் கண்கள் பற்றி ஏக்கமாக பேசிய வீடியோ உலகை வலைத்தளங்களில் ஆக்கிரமித்தது

முகத்தில் மூத்திரத்தை புகட்டிய காஷ்மீர் காவல்துறை :

காஷ்மீர் ரீடர் பத்திரிக்கையாளர்கள் அளித்த செய்தியின் படி , காஷ்மீரில் குலகாம் மாவட்டத்தில் துலினோவ்பொறா என்ற பகுதியில்
பெரோஸ் அஹ்மத் ஷாவிற்கு நேர்ந்த கொடுமை என்பது இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் தொடர் அட்டூழியங்கள் எண்ணிக்கையில் ஒன்று என்று சாதாரணாமாக எடுத்துக்கொள்ளும் மனோ நிலையை மாற்றி கொள்ளுங்கள் .
பெரோஸ் அஹ்மத் ஷா வின் மகள்கள் புர்ஹான் வானியின் படுகொலை எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டனர் . அந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த பெரோஸ் வெளியே வந்து , காவல்துறை அதிகாரிகள் உங்களுக்கு தொல்லை கொடுக்கலாம் அதனால் வீட்டிற்குள் வருமாறு தனது மகள்களை கேட்டுக் கொண்டார் .
உடனடியாக சிறிது நேரத்தில் காவல்துறை வாகனம்
பெரோஸ் அஹ்மத் ஷா அவர்களின் வீட்டை சூழ்ந்து அவரை கொடுமைப்படுத்த தொடங்கினர் . அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி சாலையில் அடித்து இழுத்துச் சென்றனர்.
காவல்துறை அதிகாரிகள் பெரோஸ் அஹ்மத் ஷா வின் கால்களை பிடித்து இழுத்துக்கொண்டும் தரையில் தேய்த்துக் கொண்டும் 500 மீட்டர் தொலைவு முழுக்க சுற்றி வலம் வந்தனர். தாகத்தால் கெஞ்சி பெரோஸ் அஹ்மத் ஷா காவல் துறை அதிகாரிகளிடம் குடிப்பதற்கு . இறைவனுக்காக எனக்கு தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளார் .
ஒரு பாட்டில் நிறைய மூத்திரத்தை பிடித்து வந்து பெரோஸ் அஹ்மத் ஷா வின் முகத்தில் தெளித்துள்ளனர் .
மலம் வெளியாகும் ஆசானாய் பகுதியில் குச்சியை விட்டு குத்தியதால் சுயநினைவு இழந்து துடி துடித்து சுருண்டு விழுந்துள்ளார் . இரண்டு நாள் கழித்து குல்கம் காவல்நிலையத்தில் அவருக்கு நினைவு திரும்பியது .
காவல்துறை அதிகாரிகள் பெரோஸ் அஹ்மத் ஷாவை உரிய மருத்துவம் செய்ய அனுமதிக்க வில்லை . அவரின் மனைவி மற்றும் மற்ற காஷ்மீர் மக்கள் அவரை விடுதலை செய்ய காவல் துறை அதிகாரிகளிடம் கெஞ்சி இருக்கின்றார்கள் . அவரை உயிரோட விட்டதால் அவர் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் மீது இன்னும் வழக்கு பதியவில்லை என்றும் அதிகாரக் கர்வத்தில் எள்ளி நகையாடி உள்ளனர் .
மறுநாள் மருத்துவமனைக்கு சென்ற பெரோஸ் அஹ்மத் ஷாவின் இடது கை காவல்துறையின் பலத்த தாக்குதலால் முறிந்து செய்தியும்
அறுவை சிகிசிச்சைக்கான தேவையில் அவர் தற்போது இருப்பது வறுமையும் அடக்குமுறையும் ஒரு சேர காஷ்மீரில் காட்சி தந்தது .

காஷ்மீர் மக்களின் நிறைவேறாத வாக்குறுதி

மேற்சொன்ன இந்திய ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கும் , காஷ்மீர் மக்களின் போராட்டத்திற்கும் தொடர்பே காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளும் ஒரு காரணங்கள் ஆகும்.விடுதலைக்குப் பிறகான காலகட்டத்தில் இந்திய ஒன்றியத்துடன் பல சிற்றரசுகள் வல்லபாய் படேல் அவர்களால் இணைக்கப்பட்டது . இந்து மதத்தை சேர்ந்த ஒருவரை மன்னராகக்கொண்ட காஷ்மீரையும் இணைக்க திட்டமிட்டார்கள் . இணையமறுத்த காஷ்மீருக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. காஷ்மீர் மக்கள் அதனை எதிர்கொள்ள தயாரானார்கள் .
குறிப்பிட்ட காலம் இணைந்திருக்க வேண்டும். பிறகு ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் காஷ்மீர் தனியாக பிரிந்து செல்வதா, இந்தியாவுடன் நீடிப்பதா, அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்று பெரும்பான்மை மக்கள் முடிவு செயல்படுத்தப்படும்.அதுவரைக்கும் காஷ்மீருக்கு சில சலுகைகள் உண்டு.
அங்கு பிற மாநிலத்தவர் சொத்து வாங்கமுடியாது. காஷ்மீர் அரசு அலுவலகங்களில் காஷ்மீர் தனி தேசியக்கொடி பறக்கலாம். இதுபோல் பல...
இடையில் காஷ்மீரின் கால்பகுதியை சீனா ஆக்ரமித்தது (COK - China Occupied Kashmir). பாகிஸ்தான் கால் பகுதியை ஆக்கிரமித்து ஆசாத் காஷ்மீர் என்று அறிவித்தது (POK - Pakistan Occupied Kashmir) இதற்கு பாகிஸ்தான் அரசு தேர்தல் நடத்தும். மக்கள் ஆசாத் காஷ்மீரின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள்.மீதி பகுதி மட்டும் காஷ்மீர் மாநிலமாக, வேறு வார்த்தைகளில் IOK - India Occupied Kashmir என்று தொடர்கிறது. இங்கு மட்டும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். தலைநகர் ஜம்முவும், ஸ்ரீநகரும் ஆகும்

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு காஷ்மீர் !

1947 ல் பிரிட்டிஷ், பெரும்பான்மை இந்துக்களை கொண்ட இந்தியாவையும், பெரும்பான்மை முஸ்லிம்களை கொண்ட பாகிஸ்தானையும் இரண்டாக பிரித்து சென்ற நாள் முதல் இந்திய ஆக்கிரமிப்பு படைகளின் கையில் சிக்கி இன்று வரை தவிக்கின்றது .
முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள ஜம்மு& காஷ்மீர்பகுதியை இந்தியப் படைகள் பொது நீதிக்கு எதிராகவும் மற்றும் காஷ்மீர் மக்களின் சுயமுடிவுக்கு எதிராகவும் செயல்பட்டார்கள் . காஷ்மீர் மக்களை நிர்பந்தப்படுத்தி இந்தியாவுடன் இணைத்துக்கொண்டார்கள். சுயமாக முடிவெடுக்கும் உரிமையை ஐ.நா சபை காஷ்மீர் மக்களுக்கு அளித்திருக்க இந்திய அரசு அதை செயல்படுத்த மறுக்கின்றது .
.
இந்த ஆக்கிரமிப்பு படைகளிடமிருந்து தங்களை சுதந்திரமானவர்களாக ஆக்கிக் கொள்ள ஜம்மு& காஷ்மீர் மக்கள் விடாமல் போராடி வருகிறார்கள். காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தின் விளைவாக 5 லட்சத்திற்கும் மேலான படைகளை இறக்கி ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மக்களை நசுக்கி வருகிறார்கள்.
வெறும் ஒரு கோடி மக்களுக்காக எந்த நாட்டிலும்/ நகரத்திலும் இது போன்ற அடக்குமுறை இல்லை என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல் ஆகும் . 6.5 கோடி தமிழக மக்களுக்கு 85,000 காவல் துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திகள் .
இதுவரை இந்திய ஆக்கிரமிப்புப்படைகள், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளது.5 லட்சத்துக்கும் உட்பட்டவர்கள் காணாமல் சென்றுவிட்டனர் . ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் சித்திரவதை மையத்தில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு செய்யப்பட்டுள்ளனர். இவைகளையெல்லாம் மக்கள் தொகையை குறைக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சூழ்நிலைகள் வெறும் காஷ்மீர் மக்களின் வாழ்க்கையை மட்டும் அழிக்கவில்லை.மாறாக, உலக அமைதியை சிதைத்து உள்ளது .மூன்று போர்களுக்கு வித்திட்டு உள்ளது . இரு நாடுகளின் மோதல்களுக்கு காரணாமாக அமைந்து உள்ளது
.
காஷ்மீர் இந்திய அரசிற்கு பலமா ? பலவீனமா ?
போராட்டம் நடத்துபவர்களின் வன்முறையாலும் அவர்களுக்கு எதிராக அரசுப் படைகள் நடத்துகிற வன்முறைகளாலும் காஷ்மீர் எரிகிறது என்பது தெளிவாகின்றது .
காஷ்மீர் மக்களின் போராட்டத்தின் வீரியத்தை உணராமலேயே இந்திய அரசு உணர்ச்சியற்ற நிலையிலேயே இருக்கின்றது ..தன்னிடம் அதிகாரமும் படைபலமும் இருக்கிறது. அதைக் கொண்டு இந்தப் பிரச்சினையை அடக்கிவிடலாம். அடக்குவதால் வருகிற விளைவுகளையும் சமாளித்து விடலாம். இதுதான் காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு என்று மத்திய அரசு கருதுகிறது.
காஷ்மீர் விடயத்தில் வறட்டு பிடிவாதம் அரசின் பிடி மக்கள் மீது இறுக்கமாக இருக்கின்றது இதன் மூலம் இந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த வன்முறைகள் காலப்போக்கில் பலவீனமடைந்துவிடும் என்று அரசு கணிக்கிறது.
காஷ்மீர் பிரச்சினைக்காகத் தற்போது பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர் கமிட்டியில், காஷ்மீரைச் சேர்ந்த எந்தவொரு வகையான அரசியல் கட்சிக்கும் பிரதிநிதித்துவம் இல்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் ஆகும் .
இந்திய அரசின் இத்தகைய அணுகுமுறைகள் தவறானவை என்பதைத்தான் நவீன காலத்து காஷ்மீரின் வரலாறு தெரிவிக்கிறது. வரலாற்றுரீதியாக ஆராய்ந்து பார்த்தால், காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய போராட்டம் தொடங்கியதற்கு மத்திய அரசின் குளறுபடிகளும் மோசடிகளும் ஒரு முக்கியமான காரணம் என்பது தெளிவாகின்றது .
காஷ்மீர் பிரச்சினையை அரசியல் ரீதியான பிரச்சினையாக இந்திய அரசு பார்க்க தவறியது என்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கான அரசியல் ஆலோசகராகப் பணியாற்றிய தன்வீர் சாதிக் ஹிந்து பத்திரிக்கையில் மேற்சொன்ன கருத்துக்களை பதிவு செய்து இருந்தார் .

மக்கள் நினைவு கொள்ள வேண்டிய உரத்த சிந்தனைகள் :

தற்போது காஷ்மீர் மக்கள் மீது செலுத்தப்படும் பெல்லட் குண்டுகளினால் கடுமையாக பாதிப்பை அடைந்துள்ளனர் . காஷ்மீரில் கடந்த 2010ம் ஆண்டு முதல் பெல்லட் வகை குண்டுகள் இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறை அதிகாரிகள் இது அபாயகரமான வகையை சேர்ந்த ஆயுதம் இல்லை என்கின்றார்கள் .
ஆனால் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களோ இது அபாயகரமான ஆயுதம் இதனால் ஒருவருக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.
ஓரே குண்டில் 100 க்கும் மேற்பட்ட சிறு சிறு துகள்கள் வெளியே சீறி பாய்ந்து எதிர் இருபவர்களை கடுமையாக பதம் பார்க்கும் என்கிறார்கள் .
ஒவ்வொரு துகளும் சர்வ சாதாரணமாக உடலை கிழித்துக்கொண்டு உள்ளே செல்லும். கண் பகுதியில் தாக்கினால் திசுக்கள் கிழிந்து முழு பார்வை பறிபோகும் அளவிற்கு தாக்கம் இருக்கும். பெரும்பாலும் கண் பார்வை இழக்க நேரிடும்.
பெல்லட் குண்டுகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு
இதுவரை 447 அறுவை சிகிசிச்சை மருத்துவரால் செய்து முடிக்கப்பட்டுள்ளது . இதில் 143 அறுவை சிகிச்சை மட்டும் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட கண்களுக்கு செய்த சிகிச்சைகள் ஆகும் .
இந்திய ராணுவத்தின் தாக்குதலால் 100 பேர்களுடைய கண்களில் பலத்த காயம் ஏற்பட்டது .35 பேர் கண் பார்வையை இழந்தனர் .
புர்ஹான் வானியைத் தொடர்ந்து கடந்த இரண்டு வார மோதலில் ஆக்கிரமிப்பு படையினர் புரிந்த படுகொலை 48 பேர் ஆவர் . காயம் அடைந்த மக்கள் 3500 பேர் ஆவர் .
காஷ்மீர் மக்களுக்கு இதுவரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் , கற்பழிப்புகள், சிறை தண்டனைகள். தாக்குதல்கள் , அவர்களின் சுய மானபிரச்சினைகள் அனைத்தும் பற்றி விசாரிக்கப் படவேண்டும் .
இந்தியா வன்முறை செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால்,
இலங்கை அரசின் குற்றங்களை விசாரித்தது போல் சர்வதேச அமைப்புக்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் தலைமையில் சர்வதேச விசாரணை நடத்தவேண்டும்.
இதுபோன்ற சமயங்களில், சர்வதேச அமைப்புகளான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை, ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு போன்றவைகள் இதில் தலையிட்டு இவர்களின் தீவிரவாத செயல்களை தடுத்து, மக்களை காக்கும் பணிகளையும், இப்பிரச்னைகளுக்கு தீர்வுக் காணும் பொறுப்புகளை கையில் எடுக்க வேண்டும் .
காஷ்மீர் மக்களின் முடிவையே அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் .மக்களுக்கு கொடுமைகள் புரியும் ராணுவங்களை முற்றிலுமாக தளர்த்தி ராணுவமயம் அற்றதாக ஆக்க வேண்டும் .
நிராயுதபாணியாக வாழும் காஷ்மீர் மக்கள் மீது அதிகார வர்க்கம் புரியும் காவல் கொலைகள் , கற்பழிப்பு அக்கிரமங்கள் ,சித்ரவதைகள் போன்றவற்றிக்கு ஆதரவாக இருக்கும் கடுமையான சட்டங்களான AFSPA மற்றும் Public Safety Act முழுமையாக ரத்து செய்ய வேண்டும் .
சிறை, வீட்டுக்காவல் மற்றும் இன்னபிற மையங்களில் இருக்கும் அரசியல் வாதிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் அரசியல் உரிமைகளை திரும்ப தரவேண்டும்.
ஐ.நா மற்றும் சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் இன்னபிற அமைப்புகளுக்கு காஷ்மீரில் பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் இரும்பு திரை விலகும்.அரசியலில் முழு சுதந்திரம் தரப்படவேண்டும்.
மேற்சொன்ன தீர்மானங்களை நோக்கி காய் நகர்த்தவே அனைத்து கூட்டணி ஹரியத் சபையின் தலைவர் செய்யத் அலி கீலானி போன்றோர்களும் காஷ்மீர் மக்களின் அவல நிலை குறித்து உலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக , உலக தலைவர்களுக்கும்,
UN, EU, SAARC மற்றும் OIC போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும்கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார்கள் .
இவற்றை அவசர நடவடிக்கையாக எடுக்கப்படுவதன் மூலமே உலக அமைதி , நீதி மற்றும் முன்னேற்றத்தின் பக்கம் காஷ்மீரை கொண்டு செல்ல முடியும் என்பது பெரும்பான்மையான காஷ்மீர் மக்களின்
உணர்வுப்பிரச்சினைகளாக இருக்கின்றது .
காஷ்மீரின் உண்மை நிலவரங்கள் உலகில் வெளிவர கடுமையான கெடுக்கு பிடிகள் அதிகார்வர்க்கத்தால் போடப்பட்ட நிலையிலும் சர்வதேச மக்கள் காஷ்மீர் மக்களுக்கு குரல் கொடுக்கின்றனர் .இதற்க்கு பிறகும் காவிமயமாகிய இந்திய ராணுவம் இனியும் காஷ்மீர் மீதான பிடியை தளர்த்தி கொள்ள வில்லையென்றால் ,
புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பற்றிய கருத்தரங்கில் கூறியது போல 68000 காஷ்மீரிகளைக் கொன்ற இந்தியா இனியும் ஜனநாயக நாடு என்று கூற உரிமை இல்லை .2500 முஸ்லிம்களைக் இனப்படுகொலை செய்த நாட்டிற்கு மதச்சர்பற்ற நாடு என்று கூற தகுதியில்லை என்பது சர்வதேச மக்களுக்கும் நிரூபணமாகும்.

நன்றி :
இலங்கை நாட்டில் அல் ஹஸனாத் சர்வதேச சஞ்சிகையில் (ஆகஸ்ட் மாதம் 2016) எனது கட்டுரையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி

-அபூஷேக் முஹம்மத்

Thanks To: FB   Abdul Wahab
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.